புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2013

ஒரே மேடையில் தி.மு.க-அ.தி.மு.க எம்.பி-மந்திரிகள் 
 
சேலம் கரூர் ரயில் போக்குவரத்து தொடக்க விழா சேலம் ஜங்க்சனில் நடந்தது.



நான்கு நாட்கள் முன்பே 1 ம் தேதிக்குள் ரயில் போக்குவரத்தை இயக்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் என தி.மு.க எம்.பி கே.பி ராமலிங்கம் அறிவித்தார்.
இதையே கோரிக்கை மனுவாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரியிடம் கொடுத்தார்.  இதையொட்டி மே 25 அன்று தொடக்க விழா நடந்தது.  இதில் தி.மு.க தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள்,உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்.  அதே போல அ .தி.மு.க வினரும் திரண்டனர். 


இரண்டு கட்சி கொடியும் ஒரு சேர பறந்தன.  அதே சமயம் திமுக எம்.பி.க்கள் , கே.பி.ராமலிங்கம்,ஆதிசங்கர், தமிழக சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால், அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, அதிமுக எம்.பி.க்கள் மு.தம்பிதுரை, எஸ்.செம்மலை,  சேலம் மேயர் எஸ்.சௌண்டப்பன் உள்ளிட்டோர் மேடை யேறினார்.  இரு கட்சியினரும் தங்களால் தான் இந்த பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங் கப்பட்டது என்றனர்.

இறுதியாக இவர்கள் அனைவருமே கொடி அசைக்க ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

ad

ad