புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2013

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ தி மு க பாரிய வெற்றி பெரும் என்ற கணிப்பில் தி மு க தி மு க கட்சியினர் அ தி மு க வுக்கு பாய்ச்சல் தி மு க வுக்கு பலத்த அடி .பரிதி இளம்வழுதி அதி மு க இல் இணைகிறார் 

திமுக மாஜி அமைச்சர் பரிதி இளம்வழுதி
ஜெ.,வுடன் சந்திப்பு
 


திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை சென்னை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசினார். ஜெயலலிதாவின் கொடநாடு பயணத்தின்போது இந்த சந்திப்பு நிகழ்ந்தது.


மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட முரன்பாடு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக திமுகவின் தலை மையால் புறக்கணிக்கபட்டுள்ளார்.  அவரிடம் இருந்த மாநில துணை பொதுச்செயலாளர் பதவியும் பறிக் கப்பட்டது.
காலம் மாறும், சூழ்நிலை கனிந்துவரும் என்று 2 வருடங்களாக காத்திருந்து...காத்திருந்து ஏமாந்து போனார்.  இந்நிலையில் அவர் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளார்.

 இதையடுத்து அவர் அதிமுகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.

ad

ad