கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்ற றகர் போட்டியின் போது வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பலர் வீரர்கள் காயமுற்ற நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதோடு மைதானத்துக்குள்ள நுழைந்த பொலிஸார் சுமூக நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
கண்டி கிங்ஸ்வூட் கல்லூரிக்கும் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரிக்கும் இடையிலான றகர் போட்டி இன்று மாலை கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் கிங்ஸ்வூட் கல்லூரி 2 பெனல்டிக் மூலம் புள்ளிகளையும் புனித அந்தோனியார் கல்லூரி ஒரு ட்ரை மூலம் 5 புள்ளிகளையும் பெற்றிருந்த போதே இரு அணி வீரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். பின்னர் மைதானத்துக்குள் நுழைந்த பொலிஸார் மோதலை விலக்கி சுமூக நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த வீரர்கள் உடனடியாக அம்பியுலன்ஸ் வண்டி மூலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.