புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2013

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக நிகழ்வு தாயகத்தில்டான் யாழ் ஒளி தொலைக்காட்சி ஊடாக இருந்து நேரடி ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது 



மடத்துவெளி முருகன் கோவில் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியர் கோவில் மூன்று தசாப்தங்களை கடந்து பாரிய பொருட் செலவில் முற்றிலுமாக புனருத்தாரணம் செய்யபட்டுள்ளது.அத்தோடு புதிய ராஜகோபுரமும் கட்டப்பட்டு எதிர்வரும் 28 ஜூன் வெள்ளியன்று காலை 8 மணிக்கு குடமுழுக்கு காணவுள்ளது. புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழும் இந்த பகுதி மக்களினால் திரட்டப்பட்டு வழங்கப்பட்ட பெரும்பொருளுதவி கொண்டு இந்த ஆலயம் நவீன முறையில் முற்றிலுமாக சீர்திருத்தம் செய்யபட்டு வருகின்றது .ராஜகோபுரம் சிற்பதேர், தேர்முட்டி ,மூலஸ்தானம், வசந்த மண்டபம், பிள்ளையார் அம்மன் வைரவர் ஆலயங்கள் ,மணிமண்டபம் சுற்று வீதி ,வெளிப்புற சுவர் ,முற்றிலும் புதிய கூரை அமைப்பு ,உள் வெளி கிணறுகள், பின்பக்க தோட்டம் ,இரண்டு மனிகூண்டுகள், புதிய நவீன தரை விரிப்பு ,மலசலகூடம்,ஆலய குருவின் வீடு, வெளி வீதி ,சுற்று புறம் என அனைத்தும் நுணுக்கமான முறை கொண்டு திறம்பட அமைக்கபட்டுள்ளன.புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த பணிகள் கவனிக்கபட்டு சிறப்பாக முடிவுறும் தறுவாயில் உள்ளது .
நடைபெறவுள்ள கும்பாபிசேக நிகழ்வுகளை 29 ஜூன் இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மூலம் உலகெங்கும் காண முடியும் இந்த ஒளிபரப்பு பற்றிய முழுவிபரம் பின்னர் அறியத்தரப்படும்.www.dantv.tv

ad

ad