பரிதி இளம்வழுதிக்கு இது போதாத நேரம் :மா.சுப்பிரமணியன்
முன்னாள் திமுக அமைச்சர் பரிதிஇளம்வழுதி ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுகவில் சேர்ந்தார். அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்தது பற்றி
முன்னாள் மேயரும், தி.மு.க. இளைஞர் அணி பொது செயலாளருமான மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், ‘’பரிதி இளம் வழுதி தி.மு.க.வில் இருந்தவரை கட்சி அவருக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவரது தந்தை தி.மு.க. மாவட்ட செயலாளராக இருந்தார். அவரை தொடர்ந்து பரிதி இளம் வழுதிக்கும் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது.
7 முறை எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 6 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார். தி.மு.க. அமைச்சரவையில் மந்திரியாக்கப்பட்டார்.
கட்சியில் துணை பொது செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பராக இருந்தார். கலைஞரால் மிகவும் பாராட்டப்பட்டவர்.
2011-க்கு பிறகு அவர் தி.மு.க.வில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இப்போது அவருக்கு போதாத நேரம். அரசியல் புகலிடம் தேடி சென்றுள்ளார்.
அவர் ஒருவர் விலகி சென்றதால் மாபெரும் இயக்கமான தி.மு.க.வுக்கு எந்த இழப்பும் கிடையாது. ஒரு கோடிக்கும் மேல் தொண்டர்களை கொண்ட இயக்கம் தி.மு.க. ஒருவர் போனால் நாலு பேர் வரு வார்கள்’’என்று கூறினார்.