அதிமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 143
டி.ராஜாவுக்கு 34 வாக்குகள் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 22 வாக்குகள் திமுக வேட்பாளர் கனிமொழி 31 வாக்குகள்
வாக்குப் பதிவின்போது தமிழக சட்டமன்ற
உறுப்பினர்கள் 231 பேர் வாக்களித்தனர். பாமக உறுப்பினர்கள் 3 பேர் வாக்குப் பதிவில் கலந்து கொள்ளவில்லை. 231 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாதது ஆகிவிட்டது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கனிமொழி 31 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இரண்டாவது முறையாக ராஜ்யசபாவுக்கு தேர்வானார்.
தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடை பெற்றது. இந்த வாக்குப் பதிவின்போது தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 231 பேர் வாக்களித்தனர். பாமக உறுப்பினர்கள் 3 பேர் வாக்குப் பதிவில் கலந்து கொள்ளவில்லை. 231 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாதது ஆகிவிட்டது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜா 34 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் மீண்டும் ராஜ்யசபாவுக்கு தேர்வானார்.
ராஜ்யசபாவுக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட 4 பேரும் வெற்றி பெற்றனர். மைத்ரேயன், அர்ஜூனன், ரத்தினவேல் ஆகியோர் தலா 36 வாக்குகள் பெற்றனர். லட்சுமணன் 35 வாக்குகள் பெற்றார்.வாக்கு எண்ணிக்கை முடிவில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 22 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.