புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2013

நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிலநாட்களுக்கு முன் ராய்ட்டர் செய்தி
நிறுவனத்துக்கு பேட்டி அளித்த நரேந்திர மோடி இஸ்லாமியர்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். 2002ஆம் ஆண்டு மோடி முதல்வராக இருந்தபோது குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம் குறித்து பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளனர். ’அந்தக் கலவரத்துக்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?’ என அந்த நிருபர் கேட்டபோது “யாராவது காரை ஓட்டிக்கொண்டு போகிறார்கள். நாம் பின் இருக்கையில் அமர்ந்திருக்கிறோம். அப்போதுகூட கார் சக்கரத்தின் கீழே நாய்க்குட்டி ஒன்று ஓடிவந்து அடிபட்டு செத்துப்போனால் அது வருத்தம் அளிக்குமா இல்லையா? வருத்தம் தரும்.” என்று அவர் பதில் அளித்திருக்கிறார்.

குஜராத்தில் நடத்தப்பட்டது இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை என்பதைப் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தெளிவுபடுத்தியுள்ளன. அதற்குக் காரணமானவர் அன்றைக்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிதான் என்பதை உலகம் அறியும். அங்கு நடத்தப்பட்ட போலி என்கவுண்ட்டரில் இஷ்ரத் ஜஹான் என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இப்போதுதான் சி.பி.ஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அந்த வழக்கில் மோடியும் குற்றவாளியாக சேர்க்கப்படலாம் என சொல்லப்படுகிறது.  அவரது கரத்தில் ரத்தக் கறை படிந்திருப்பதால்தான் அமெரிக்கா அவரைத் தனது நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீட்டால் பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளராக மோடி முன் நிறுத்தப்படுகிறார். 

வளர்ச்சி, முன்னேற்றம் என மாய்மாலம் பேசிவந்த மோடி இப்போது வெளிப்படையாகத் தனது இந்துத்துவா முகத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார். அதன் ஒரு அங்கம்தான் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் இந்த நேர்காணல். இத்தகையவர் பிரதமராக வந்தால் இந்த நாட்டில் மதக் கலவரங்கள்தான் நடக்கும். ’குஜராத் மாடலை’ இந்தியா முழுமைக்கும் பரிசோதித்துப் பார்க்க சங்கப் பரிவாரங்கள் தயாராகிவிட்டன என்பதைத்தான் மோடியின் நேர்காணல் காட்டுகிறது. இதை ஜனநாயக சக்திகள் அனுமதிக்கக்கூடாது. இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ததோடல்லாமல் அவர்களை நாயுடன் ஒப்பிட்டுப் பேசி இழிவுபடுத்தியிருக்கும் நரேந்திர மோடி தனது பேச்சுக்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும். அல்லது அவர் மீது மத்திய அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். 

ad

ad