புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2013

வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்­னணி ஆத­ரவு வழங்­க­வேண்டும் என்று ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் பிர­தித்­த­லை­வரும் மேல் மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான ந. கும­ர­கு­ரு­பரன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­­வது:-
எதிர்­வரும் வடக்கு மாகா­ண­ச­பைத் தேர்தல் தமி­ழர்­க­ளுக்கு பலம் சேர்ப்­ப­தாக இருக்­க­வேண்­டுமே தவிர தமி­ழர்­களின் பலத்தை இழக்கச் செய்­வ­தாக அமைந்­து­வி­டக்­கூ­டாது.
13 ஆவது திருத்தச் சட்­டத்தை இல்­லாது ஒழித்து மாகா­ண­சபை முறை­மை­யினை அடி­யோடு அழிக்க அர­சாங்கம் முயன்­று­வ­ரு­கின்­றது. இந்த யதார்த்த அர­சி­யலை புரிந்து கொண்டு வட­மா­கா­ண­சபை தேர்­தலில் கூட்­ட­மைப்­பை ஆத­ரிக்க கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி முன்­வ­ர­வேண்டும்.
மாகா­ண­சபை முறை­மை­யினை ஒழிக்க முயலும் அர­சாங்­கத்தின் கைக்­கூ­லிகள் இந்தத் தேர்­தலில் வெற்­றி­பெ­று­வதை தடுக்­க­வேண்டும். இதற்கு தமிழ் தேசி­ய மக்கள் முன்­னணி கூட்­ட­மைப்பை ஆத­ரிப்­பதே ஒரே வழி­யாகும். மாகா­ண­ச­பைகள் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வாக அமை­யா­விட்­டாலும், இந்த இடை­வௌியை அர­­சுக்கு ஆத­ர­வாக மாற்­றாது தமிழர் தலை­மைக்கு வலுச்­சேர்க்­க­வேண்டும்.
கூட்­ட­மைப்­பிற்கு ஆத­ரவு வழங்­கு­மாறு தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலை­வ­ரிடம் நான் கோரி­யுள்ளேன். தற்­போ­தைய நிலையில் அதுவே அவ­சி­ய­மா­ன­தாகும்.

ad

ad