புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2013

பொது வேட்பாளராக ஏகமனதாக அறிவித்ததால் ஒப்புதல் அளித்தேன்: சி.வி. விக்னேஸ்வரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் பொது வேட்பாளராக தன்னை அறிவித்ததால், வட மாகாணத்துக்கான முதல்வர் பதவிக்கான, கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் ஒப்புதல் அளித்து விட்டதாக, இலங்கை உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
 அரசியலுக்கு வெளியில் இருந்து வந்தாலும், தான் அரசியலை தீவிரமாக அவதானித்து வந்தவர் என்ற வகையில், இந்த அரசியல் பிரவேசம் பெரிய சவாலாக இருக்காது என்று நம்புவதாகவும் அவர் தமிழோசையிடம் கூறினார்.
மேலும், தமிழ் அரசியலில், முன்பு இருந்த பொன்னம்பலம், ராமனாதன், அருணாசலம், செல்வநாயகம் போன்ற தலைவர்களும் கொழும்பில் சட்டப்பணியாற்றி யாழ்ப்பாண அரசியலுக்கு வந்தவர்கள் என்பதையும், வந்த பின்னர் அவர்கள் சாதாரண மக்களின் சுக துக்கங்களில் பங்கேற்றுக்கொண்டனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் நீதித்துறை அரசியல் மயமாகிறது என்ற குற்றச்சாட்டை, இவரது அரசியல் பிரவேசமும் வலுவாக்குமா என்று கேட்டதற்கு, தான் நீதித்துறையிலிருந்து ஓய்வு பெற்று சுமார் பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இது போன்ற குற்றச்சாட்டுக்கு இடமில்லை என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி சிந்தித்து நடவடிக்கை எடுப்பது, நீதித்துறையின் சுயாதீனத்தை பாதிக்காது என்றார் அவர்.
வட மாகாணத்தில் நடக்கவிருக்கும் இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல், 13வது அரசியல் சட்டப்பிரச்சினைகள், அதற்கு மேலும் தமிழ் மக்களுக்கு தேவைப்படும் அரசியல் உரிமைகள் குறித்த சட்டப் பிரச்சினைகள் போன்றவற்றை கையாள்வதற்கு விக்னேஸ்வரன் போன்ற நீதித்துறை மற்றும் சட்ட வல்லமை பெற்றவரின் அனுபவம் பயன்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.
கூட்டமைப்பில் உட்கட்சிப் பிரச்சினைகளை மறைக்க கூட்டமைப்புக்கு வெளியேயிருந்து இவரை நியமித்ததாக கருத்து நிலவுவது சரியல்ல என்றும் அவர் கூறினார்.

ad

ad