புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2013

ஆசியக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது இந்தியா: உலகக் கிண்ணத்துக்கும் தகுதி பெற்றது

ஆசிய கிண்ண ஹொக்கி தொடரின் அரையிறுதியில் மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
மலேசியாவில் உள்ள இபோ நகரில் ஆடவருக்கான 9வது ஆசிய கிண்ண ஹொக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின.
லீக் சுற்றின் முடிவில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின.
தொடக்கத்தில் இருந்து இந்திய வீரர்கள் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
இதனை சரியாக பயன்படுத்திய ரகுநாத், முதல் கோல் அடித்தார். இதற்கு மலேசிய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் அசத்திய இந்திய அணிக்கு 60வது நிமிடத்தில் மலேசிய கோல்காப்பாளரை ஏமாற்றி ராமன்தீப் பாஸ் செய்த பந்தை மன்தீப் சிங் கோலாக மாற்றினார்.
சாமர்த்தியமாக விளையாடிய இந்திய கோல் காப்பாளர் ஸ்ரீஜேஷ், மலேசிய வீரர்களின் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை தடுத்து கோல் அடிக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஏழாவது முறையாக (1982, 85, 89, 94, 2003, 07, 13) இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதில் இரண்டு முறை (2003, 07) கிண்ணம் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, அடுத்த ஆண்டு நெதர்லாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் (2014, மே 31 - ஜூன் 15) தொடருக்கான இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்தது.
மற்றொரு அரையிறுதியில், நடப்பு சாம்பியன் தென் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம், 42 ஆண்டு கால உலகக் கி்ண்ண வரலாற்றில் பாகிஸ்தான் அணி முதன்முறையாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
நாளை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் தென் கொரியாவை சந்திக்கிறது. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் அரையிறுதியில் தோல்வி கண்ட மலேசியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
India beat Malaysia in Asia Cup hockey semis, qualify for 2014 World 

ad

ad