புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2013

5 ஆயிரம் ஆன்மிக தொண்டர்கள் சென்னை அரசு மருத்துவமனையை சுத்தம் செய்தனர்
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளை ஆன்மிக தொண்டர்கள் 5 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தூய்மைப் படுத்தினார்கள். சுவாமி விவேகானந்தரின் 150–வது பிறந்த
நாளையொட்டி ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


அந்த அடிப்படையில் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவ மனைகளில் தூய்மை பணி இன்று நடந்தன. சென்னை அரசு மருத் துவமனையில் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.


ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் அன்பழகன் தலைமையில் 5 ஆயிரம் ஆன்மிக தொண்டர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
அரசு பொதுமருத்துவ மனையில் 2000 பேர் காலை முதல் மாலை வரை இந்த பணியை செய்தனர். குழாய் விளக்கு, மின் விசிறிகள், ஜன்னல் கம்பிகள், வார்டுகளுக்கு உட்புறமும், வெளிப்புறமும், வளாகத்தையும் தூய் மைப்படுத்தினார்கள்.
ஆண்–பெண் தொண்டர்கள் ஒரே நேரத்தில் ஆஸ்பத்திரி முழுவதும் குப்பை மற்றும் கழிவுகள், கரைகளை அகற்றினார்கள். தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியின்போது சென்னை அரசு மருத்துவ மனை டீன் கனகசபை, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கள் ஆன்மிக தொண்டர்கள் மூலம் ஆஸ்பத்திரியை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்.
இந்த பெருந்திரள் தூய்மைப்படுத்தும் பணி மூலம் சென்னை அரசு மருத்துவமனைகள் சுத்தமானாலும் அவற்றை முறையாக பராமரிக்கும் பொறுப்பு பொதுமக்களுக்கும் உள்ளது.

ad

ad