தேமுதிக செயற்குழு கூட்டம்: பரபரப்பை ஏற்படுத்திய பண்ருட்டியார்
தேமுதிகவின் செயற்குழு கூட்டம் கட்சித்தலைவர் விஜயகாந்த் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற எம்.எல்.
ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க.வின் முக்கியமான ஆலோசனை கூட்டங்களில் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொள்வது வழக்கம். அவரது முன்னிலையில் தான் கூட்டம் நடைபெறும். ஆனால் இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொள்ளவில்லை.
ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள கோவை சென்று விட்டார். என்றாலும் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டதாக கூறப்பட்டது.
ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள கோவை சென்று விட்டார். என்றாலும் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டதாக கூறப்பட்டது.
இது கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியாக அவர் தே.மு.தி.க. அலுவலகத்தில் நடந்த விஜயகாந்த் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் முக்கியமான கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள வராதது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென மதியம் 2.30 மணிக்கு மேல் விஜயம் செய்தார் பண்ருட்டியார்.