புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2013

காற்று தங்கள் பக்கம் வீசவில்லையாம் – ஒப்புக்கொள்கிறது சிறிலங்கா

சிறிலங்கா எதேச்சாதிகாரப் பாதையில் செல்கிறது என்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கருத்து வெளியிட்டதில் இருந்து, காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்று புரிந்து கொள்ள முடிவதாக, ஆதங்கப்பட்டுள்ளார் சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. 

கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக, அவர் கருத்து வெளியிடுகையில்,

“ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை வெளிப்படுத்தியுள்ள இந்தக் கருத்து ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான்.

அவர் கூறியது போன்று சிறிலங்காவி எதேச்சாதிகாரம் நடைமுறையில் இல்லை.

எதேச்சாதிகார பாதையில் சிறிலங்கா செல்வதாக நவநீதம்பிள்ளை கருத்துக் கூறியிருக்கிறார்.

இதைவிட வேறுவகையான அவரது நிலைப்பாட்டை நாம் எதிர்பார்க்கவில்லை.

காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

முப்பது ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த வடக்கில், இன்று மக்களுக்கு தேர்தல் என்ற வார்த்தையைக் கேட்பதற்காவது உரிமை கிடைத்திருக்கிறது.

இங்கு தேர்தல்கள் நடக்கின்றன. அரசியலமைப்பின் கட்டமைப்புக்கு வெளியில் எதுவும் நடக்கவில்லை.

பலமான நாடாளுமன்றம் இருக்கிறது. பெரும்பான்மையான மக்களின் பங்களிப்புடன் அரசியல் நடக்கிறது. எல்லாம் இருக்கிறது.

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் கருத்து, ஏற்கனவே திட்டமிடப்பட்ட மறைமுக நிகழ்ச்சிநிரல் ஒன்றின் வெளிப்பாடு தான்.

பயங்கரவாதத்தின் மூலம் சிறிலங்காவின் உறுதித்தன்மையை சீர்குலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன.

ஆனாலும் அவற்றை அனைத்துலக மட்டத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பார்க்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களின் கருத்துக்களை இன்னும் முன்னெடுத்துச் செல்லும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது.

சிறிலங்கா போரின் போது, அனைத்துலக அழுத்தங்களை எவ்வாறு எதிர்கொண்டதோ, அதுபோலவே இப்போதும் சிறிலங்காவின் பதில் நடவடிக்கைகள் இருக்கும்.

விடுதலைப் புலிகளுடனான போரின்போது அனைத்துலக அமைப்புகள் கடுமையான அழுத்தங்களை கொடுத்தன.

முப்படைகளின் தளபதி என்ற வகையில் சிறிலங்கா அதிபர், மக்களின் ஆணைபெற்ற கட்சியின் அரசாங்கம் என்ற வகையில் திடமான முடிவுகளை எடுக்காமல் அனைத்துலக மட்டத்தில் உள்ள சிலரை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தால் சிறிலங்காவில் இன்றும் போர் முடிந்திருக்காது.

இனிவரும் சவால்களையும் அதேபோலவே எதிர்கொள்வோம்” என்றும் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ad

ad