போர்க் குற்றங்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணை இன்றேல் சர்வதேச விசாரணை: நவி எச்சரிக்கை
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் அரசாங்கமானது நம்பகமான விசாரணைகளை முன்னெடுக்காவிடின் சர்வதேச மட்டத்திலான விசாரணைகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் ஒத்துழைப்பு வழங்கும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தின் இறுதி அங்கமாக கொழும்பில் இன்று நடத்திய விசேட பத்திரிகையாளர் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர்.
மேலும் தனது இந்திய தமிழ் பாரம்பரியைத்தை வைத்து தன்னை தமிழீழ விடுதலைப் புலிகளின் கருவியென இலங்கையிலுள்ள அமைச்சர்கள், ஊடகங்கள், வலைப்பதிவாளர்கள் மற்றும் கொள்கைப்பரப்பாளர்கள் நீண்டகாலமாக தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.