புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2013

சென்னையில் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்
சென்னையில் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி போலீசார், மணக்கோலத்தில் இருந்த மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 


சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை காலை சோழவரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், இந்திரா நகரைச் சேர்ந்த 22 வயது இளைஞக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த விஷயம் அறிந்த போலீசார், திருமண மண்டபத்திற்கு சென்று திருமணத்தை நடத்த விடாமல் தடை செய்தனர். மணப்பெண்ணுக்கு 18 வயது நிறைவடையவில்லை என்று தொண்டு நிறுவனம் ஒன்று அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பெண் வீட்டாரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட பெண் வீட்டார் மற்றும் மணமக்களை வாழ்த்த வந்த அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். 
இதையடுத்து மணக்கோலத்தில் இருந்த மாணவியை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருமணத்திற்கு ஏற்பாடு செய்தவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad