புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2013

மிரிஹானை தடுப்பு முகாமில் கவிஞர் ஜெயபால/பி பி சி 
இலங்கைக் காவல்துறையினரால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ள தமிழ்க் கவிஞரும் நடிகருமான ஜெயபாலன் தற்போது குடிவரவு, குடியகல்வுத் துறை அதிகாரிகளின் பொறுப்பில் இருப்பதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரால் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி இன்று கொண்டுசெல்லப்படும் வழியில் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய கவிஞர் ஜெயபாலன், தான் விசாரணைகளின் முடிவில் நோர்வேக்கு அல்லது இந்தியாவுக்கே செல்ல விரும்புவதாகக் கூறியிருந்தார்.
சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் வந்து குடிவரவுச் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டிலேயே இலங்கை காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தன்னைக் கைது செய்துள்ளதாக ஜெயபாலன் கூறியுள்ளார்.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் பசீர் சேகுதாவூத் உள்ளிட்ட தரப்பினர் தன்னோடு தொடர்புகொண்டு பேசியதாகவும் அவர் கூறினார். அவர்கள் தனது விடுதலைக்காக அதிகாரிகளுடன் பேசிவருவதாகவும் ஜெயபாலன் தெரிவித்தார்.
ஜெயபாலனிடம் குடிவரவுத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் அவர் கொழும்பு மிரிஹானையிலுள்ள குடிவரவுச் சட்ட விதிகளை மீறுவோரை தடுத்துவைத்திருக்கும் முகாமில் தற்போது உள்ளதாகவும் அமைச்சர் பசீர் சேகுதாவூத் பிபிசி செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
அவரை பிரச்சனைகள் இன்றி நாட்டிலிலிருந்து அனுப்பிவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் அமைச்சர் பசீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad