புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2013

ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
ஊடக அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் இடம்பெற்றது.

சர்வதேச தண்டனை நிறைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இலங்கை இதழியல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை மற்றும் உலகில் ஊடகத்துறை மற்றும் கலைத்துறைக்கு சேவையாற்றி உயிர் நீத்தவர்கள் இதன்போது நினைவு கூறப்பட்டனர். அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் இலங்கை இதழியல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர் பழனி விஜயகுமார் இங்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

ad

ad