புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2013

பேரறிவாளன் வாக்கு மூலத்தை முழுமையாக பதிவு செய்யவில்லை: முன்னாள் சிபிஐ அதிகாரி
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அறிவு என்கிற ஏ.ஜி.பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பேரறிவாளன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது வி.தியாகராஜன் என்கிற ஐ.பி.எஸ். அதிகாரி சி.பி.ஐ. கேரள பிரிவின் எஸ்.பி.யாக இருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனின் வாக்கு மூலத்தை பதிவு செய்யும் பொறுப்பு சி.பி.ஐ. அதிகாரி
தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது. தற்போது சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் அளித்துள்ள பேட்டியொன்றில் பேரறிவாளனின் வாக்கு மூலத்தை தான் முழுமையாக பதிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

பேரறிவாளளின் வாக்கு மூலத்தில் தான் மாற்றம் செய்ததால் அவருக்கு தண்டனை கிடைக்க நேர்ந்தது என்றும் அதற்காக தான் வருந்துவதாகவும் கூறியுள்ளார்.
பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘பேட்டரிகளை வாங்கி, சிவராசனிடம் கொடுத்தேன். அவற்றை வெடிகுண்டுகளில் சிவராசன் பயன்படுத்தினார்’ என்று பேரறிவாளன் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தான் வாங்கிய பேட்டரி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் பயன்படுத்தப்பட உள்ளது என்பது தெரியும் என்று பேரறிவாளன் கூறவே இல்லை. அவரிடம் வாக்குமூலம் பெற்ற போது, ‘நான் பேட்டரியை வாங்கி கொடுத்தது உண்மை. ஆனால், எதற்காக சிவராசன் அதை கேட்டார் என்று தெரியவில்லை என்றுதான் பேரறிவாளன் கூறினார்.
ஒரு விசாரணை அதிகாரி என்ற முறையில், பேரறிவாளனின் வாக்குமூலம் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது தகுதியான வாக்குமூலம் அல்ல. அதாவது அவரது ஒப்புதல் இல்லாமல், சதி திட்டம் அரங்கேறியதாகதான் இதில் அர்த்தம் கொள்ளப்படும். இதனால், பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், அதை நிச்சயம் மாற்றி இருந்திருப்பேன்.
கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி காலை 11.30 மணி அளவில் பேரறிவாளனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பேரறிவாளன் வாக்குமூலம் கொடுத்த பின்னர், எனக்கு 2 வாய்ப்புகள்தான் இருந்தன. அவரது வாக்குமூலத்தை அப்படியே ஏற்பது அல்லது பிற ஆதாரங்கள் அடிப்படையில் என்னுடைய அனுமானத்தை அதில் பதிவு செய்வது. அதனால் வேறு வழியின்றி 2வது வாய்ப்பை தேர்ந்தெடுத்தேன்.
வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், பேரறிவாளன் வாக்குமூலம் தகுதியானதாக இல்லாவிட்டால் அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். 22 ஆண்டுகளுக்கு பின்னர் என் செயலுக்காக வருந்துவதற்கு காரணம், இப்போது இல்லாவிட்டால் எப்போதும் முடியாதுஎன்பதால்தான். ராஜிவ் கொலை வழக்கு விசாரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டேன். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
துரதிருஷ்டவசமாக ராஜிவ் கொலை வழக்கில் வெடிகுண்டு யாரால், எங்கு தயாரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை சிபிஐயால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு தியாகராஜன் கூறியுள்ளார்.
பேரறிவாளனின் குழந்தை பருவம் முதல் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அவர் சிக்கியது வரையிலான குறும்படம் சனிக்கிழமை வெளியானது. இந்நிலையில், தியாகராஜன் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad