புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2013


சாலைகளில் மனம் நலம் பாதிக்கப்பட்டவர்கள்:உதவிய கவுன்சிலர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் ஆதரவற்ற முதியோர்கள் அநாதைகளாக்கப்பட்டு கிடக்கிறார்கள். கிடைத்த இடத்தில் படுத்து உறங்குவது, மடங்கள், ஆஸ்ரமங்களில் தரப்படும் உணவுகளை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு காலத்தை கழிக்கின்றனர். 

சமீப காலமாக மனம் நலம் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது உறவினர்கள் கொண்டு வந்து திருவண்ணா மலையில் விட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். அவர்கள் கோயில் மாடவீதியில் படுத்துக்கிடக்கின்றனர். இவர்களை அழைத்து சென்று பராமரிக்க எந்த தொண்டு நிறுவனங்களும் முன்வருவதில்லை என்பதே உண்மை. 

கற்பக விநாயகர் கோயில், பேகோபுரத்தெரு, திருமஞ்சனகோபுரம் அருகே மனம் நலம் பாதிக்கப்பட்ட 2 வயதான பெண்கள், 25 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் என 3 பேர் திருமஞ்சன கோபுரம் அருகே கிடந்தனர். இவர்களை பார்த்து பரிதாப்பட்ட திருவண்ணாமலை நகர மன்ற உறுப்பினர் காலேஜ். கு. ரவி (திமுக) வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனத்தினரிடம் மனம் நலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள். இவர்களை அழைத்து சென்று பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


அதனை ஏற்று உதவும் உள்ளங்கள் அமைப்பின் நிறுவன தலைவர் ரமேஷ் வந்து அவர்களை தங்களது காரில் ஏற்றி சென்றுள்ளார். மனம் நலம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்க முன் வந்த அவர்களுக்கு நன்றி கூறி அனுப்பியுள்ளார்.  

ad

ad