புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2013



வெள்ளிக்கிழமை அன்று உசிலங்காட்டு வலசை முனியாண்டியின் தென்னந்தோப்புக்குள் விழுந்து உடைந்து நொறுங்கிவிட்டது, தமிழக கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய கப்பற்படையின் "சர்ச்சர் 922' என்ற ஆளில்லா
உளவு விமானம்.நக்கீரன் 

""போன வருஷம் ஏப்ரல் மாதம் இஸ்ரேலில் இருந்து 7 உளவு விமானங்களை இந்திய கப்பற்படை வாங்கியது. அதில் ஒண்ணுதான் இந்த உளவு விமானம். ரூபாய் ஒண்ணரை கோடிக்கு மேல் விலையுள்ளது. ரொம்ப உயரம் போகும். ரிமோட் கண்ட்ரோல்ல இயங்கக்கூடியது. மீனவர்களின் படகுகளைத் தேடிக் கண்டுபிடிக்கும். கடலிலோ, கடலோரத்திலோ ஆட்கள் கும்பலா நின்னாகூட ஏழெட்டு ரவுண்ட் அடிச்சுப் படம் புடிக்கும். அவங்க என்ன பேசிக்கிறாங்களோ அதை அப்படியே ரிக்கார்டு பண்ணி அனுப்பும். ஆடியோ, வீடியோ ரொம்ப க்ளீனா இருக்கும். படகுகளிலோ, கப்பல்களிலோ பிறநாட்டுக் கொடிகள் பறந்தால் அதிக அக்கறையோடு கவர் பண்ணும். சங்கேத வார்த்தைகளை கண்டு பிடிச்சிடும். அருமையான உளவு விமானம்தான். 12 அடி நீளமும் 2 அடி அகலமும் உள்ள விமானம் ராமேஸ்வரம் நெடுஞ்சாலை அருகேயுள்ள உச்சிப்புளியில் உள்ள இந்திய  கப்பற்படை விமானத்தளமான "ஐ.என்.எஸ். பருந்து' என்ற அணியில் அர்ப்பணிக்கப் பட்டிருந்தது. விழுந்து நொறுங்கியதற்கு  காரணம் தெரியலை'' என்று விளக்கமாகவே நம்மிடம் கூறினார் முகம் காட்ட விரும்பாத ஒரு அதிகாரி.

விபத்து நடந்த இடத்துக்கு வந்த ஐ.என்.எஸ். கமாண்டர் அபிஜித் காட்டகே ""ஒருக்கால்... தொழில்நுட்பக் கோளாறால் உடைந்து விழுந்திருக்கலாம்'' என்றார்.

கடற்படையிலுள்ள வேறோரு அதிகாரியோ, ""இந்தப் பகுதி முழுதும் தென்னந்தோப்புகள் இருப்பதால் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பறப்பதற்குச் சிரமமாக இருக்கிறது. இந்த கடற்படை விமானத்தளம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டுமென்றால் 50 ஏக்கர் திறந்தவெளி நிலம் வேண்டுமென, 12 வருடமாக தமிழக அரசைக் கேட்டுக்கொண் டிருக்கிறோம். ஆனால் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் ஒத்துழைக்க மறுக்கிறது. விபத்துக்கு காரணம் தென்னந்தோப்புகளா, தொழில்நுட்பக் கோளாறா என்பதை அறிய ஆய்வு மேற்கொண்டி ருக்கிறோம்'' என்கிறார்.

செம்படையார் ஊராட்சியின் தலைவர் பிலால் செம்பை நம்மிடம்...

""தென்னந்தோப்பால்தான் விமான விபத்துகளும் கோளாறுகளும் ஏற்படுகிறது என்பதைக் காரண மாக்கி எங்களை அகதிகளாக் கும் முயற்சி நடக்கிறது. எங்களின் பூர்வீக பூமியை விட்டு நாங்கள் வெளியேற வேண்டுமாம். என்னய்யா நியாயம் இது?'' குமுறினார்.

""அனைத்து அடிப்படை வசதி களோடு புதிய கிராமத்தை உருவாக்கித் தந்தால் கடற்படை விமானநிலையத்திற்காக எங்கள் நிலங்களைத் தரத் தயாராகவே இருக்கிறோம்'' என்கிறார்கள் உசிலங் காட்டு மக்களும் கிராமத் தலைவர் கண்ணையாவும்.

பாக்.ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியின் கடலோரப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருப்பது இஸ்ரேல் விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறா? தென்னந் தோப்புகளா? மாவட்ட, மாநில நிர்வாகங்களின் அலட்சியமா? பட்டிமன்றம் தொடர்கிறது.

ad

ad