புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2013




             ரு நாட்டினுடைய இறையாண்மை என்பது ஒருநாளில் உருவாவது அல்ல. ஒரு தேசம் தொடர்ந்து தனது சுயமரியாதைக்காகப் போராடும் போது மட்டுமே அது சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கமுடியும். மாறாக, தன்னைவிட வலிமையான சக்திகளிடம் தொடர்ந்து அடி பணிந்தும், சமரசம் செய்துகொண்டும், விட்டுக் கொடுத்தும்
போனால் அவர்கள் நம்மை இழிபடுத்துவதை ஒரு அன்றாட வழமையாக்கிக் கொண்டுவிடுவார்கள் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் இருக்கின்றன. நக்கீரன் 

அதன் மற்றுமொரு உதாரணம்தான் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தேவயானி கோப்ரகேட்டை அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விதம். தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்கு விசா பெறுவதற்காக போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகவும் அமெரிக்கச் சட்டப்படி அந்தப் பெண்ணிற்கு மாதம் 4,500 அமெரிக்க டாலர் சம்பளம் அளிக்கவேண்டும் என்றும், ஆனால் தேவயானி வெறும் 537 அமெரிக்க டாலர்கள் மட்டுமே சம்பளம் வழங்கியதாகவும் மேலும் அமெரிக்க தொழிலாளர் சட்டவிதிகளுக்கு மாறாக, வாரம் ஒன்றிற்கு 40 மணி நேரத்திற்குமேல் வேலை வாங்கியதாகவும் குற்றம்சாட்டி அமெரிக்க அதிகாரி கள் அவரை கைது செய்தனர். அவரைக் கை விலங்கிட்டு அழைத்துச் சென்றதுடன் அவரது ஆடைகளைக் களைந்தும் சோதனை செய்துள்ளனர். 

போதைக் குற்றவாளிகளுடன் சிறையில் அடைக் கப்பட்ட அவர், பின்னர் ஒரு கோடியே ஐம்பது லட்ச ரூபாய்க்கான பிணையத்தொகையில் விடுவிக்கப்பட் டார். தேவயானி செய்ததாகக் கூறப்படும் இந்தக் குற்றத்திற்கு இத்தகைய நடவடிக்கைகளுக்கு என்ன அவசியம் வந்தது? அவர் ஏன் ஒரு பயங்கரவாதியைப் போல நடத்தப்பட்டார்? ஒரு நாட்டினுடைய தூதருக்கு அளிக்க வேண்டிய சிறப்புச் சலுகைகள், மரியாதைகள் எதுவும் ஏன் இந்திய தூதருக்குக் காட்டப்படவில்லை?  

இந்திய அரசாங்கம் எதோ தனது நாட்டின் பிரஜை இப்போதுதான் அமெரிக்க அரசாங்கத்தால் முதல்முறையாக அவமானப்படுத்தப்படுவதுபோல போலி அதிர்ச்சியுடன் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அல்லது சக்தி வாய்ந்த மனிதர்களுக்குக்கூட அமெரிக்க அர சாங்கம் இதுவரை என்ன மரியாதையை காட்டி வந்திருக்கிறதோ அதைத்தான் இப்போதும் காட்டியிருக்கிறது. ஆனால் இதுபோன்ற அவமானங்கள் நமக்குப் புதிதல்ல. அவமதிப்பது அவர்களுக்கும் புதிதல்ல. 

இது ஒரு பச்சையான இன வெறுப்பு. இந்த இன வெறுப்பின் அடிப்படையில்தான் இப்போது இந்திய தூதரக அதிகாரியையும் அவர்கள் இதுபோல நடத்தியிருக்கிறார்கள். கடந்த காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடந்தபோது இந்தியா தனது அழுத்தமான எதிர்ப்பு எதையும் அமெரிக்க அரசாங்கத்திடம் முன்வைத்ததில்லை. மன்மோகன்சிங்கினுடைய அரசு அமெரிக்கர்களுக்கு எப்படியெல்லாம் வாலை ஆட்ட வேண்டுமென்பதில் கைதேர்ந்த அரசாக இருந்திருக்கிறது. எனவே இந்தியாவிட மிருந்து எந்த எதிர்ப்பும் பெரிதாக வராது என்று அமெரிக்க அதிகாரிகள் கொஞ்சம் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்கள். அவர்கள் மறந்துபோன ஒரு விஷயம், இந்தியாவில் பொதுத்தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான். 



இந்த விஷயத்திற்கு கடுமையாக எதிர்வினையாற்றாவிட்டால் பா.ஜ.க. இந்தப் பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் தேடும் என்ற பதற்றத்தில் மத்திய அரசு பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை வேகவேகமாக வெளிப்படுத்தியிருக்கிறது. 

பொதுவாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்தியாவில் பல்வேறு சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். அவற்றை மத்திய அரசு இப்போது கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் தங்களிடம் உள்ள அடையாள அட்டைகளை உடனடியாகத் திருப்பி அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் அட்டைகளைப் பொறுத்து, அவற்றிற்கேற்ப இங்கு அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவற்றின் தரம் குறைக்கப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் விமான நிலைய அனுமதிச்சீட்டுகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தூத ரகங்களில் பணியாற்றும் இந்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்ட முக்கிய தக வல்களும் கோரப்பட்டுள்ளன. 

மேலும், இந்தியாவில் உள்ள அமெரிக்கப் பள்ளிகளில் பணியாற் றும் அமெரிக்க ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் விசா தொடர்பான தகவல்களையும், இந்தப் பள்ளிகளில் இந்தியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல் களையும் வழங்குமாறு மத்திய அரசு கோரியுள்ளது. மதுபான வகைகள் உள்பட பல்வேறு பொருள் களை இறக்குமதி செய்துகொள் வதற்கு அமெரிக்கத் தூதரகத்துக்கு அனுமதி அளிப்பதையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது. தில்லி நியாயாமார்க் பகுதியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே உள்ள பாதுகாப்புத் தடுப்புகளும் அகற்றப் பட்டுள்ளன. மேலும் அமெரிக்க எம்.பி.க்களுடனான சந்திப்பை ராகுல் காந்தியும் உள்துறை அமைச் சர் சுஷில் குமார் ஷிண்டேயும் ரத்து செய்தனர். கடந்த இருபதாண்டு களில் அமெரிக்காவுக்கு எதிராக இவ் வளவு கடுமையாக இந்தியா நடந்து கொள்வது இதுவே முதல்முறை. 

இந்த உலகிலேயே சட்ட பூர்வமாக, சட்டவிரோத காரியங் களைச் செய்யும் முதன்மையான நாடு அமெரிக்காதான். அமெரிக்கா வின் சட்டங்கள் சித்திரவதைகளை ஏற்பதில்லை. ஆனால் அந்நிய நாட்டவர்களுக்காக அவர்கள் குண்டனோமா சிறைச்சாலை யை நிறுவி அங்கு கொடூரமான சித்திரவதைகளை அரங்கேற்று வார்கள். பராக் ஒபாமா அவற்றை மூடப்போவதாகச் சொன்னாலும் இன்றுவரை அவை செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. சி.ஐ.ஏ. என்ற கொடூரமான உளவு அமைப்பின் மூலமாக உலகின் பல முக்கியமான தலைவர்கள் உட்பட ஏராளமானவர்களை அமெ ரிக்கா கொன்று தீர்த்திருக்கிறது. 

தேவயானி விஷயத்திற்கு வருவோம். அவர் வீட்டு பணிப்பெண்ணிற்கு மாதம் 4,500 அமெரிக்க டாலர்கள் சம்பளம் வழங்க வேண்டும் என்று சொல்வது ஒரு அபத்தமான வாதம். ஏனென்றால் தேவயானி இந்திய அரசாங்கத்திடம் வாங் கும் மாதச் சம்பளமே 4120 அமெரிக்க டாலர்கள்தான். அமெரிக்காவில் 194 நாடுகளைச் சார்ந்த தூதரகங்கள் இருக்கின்றன. அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பணியாளர்களை தங்கள் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தியிருக்கின்றனர். அவர்கள் அனை வரும் அமெரிக்க அரசாங்கம் விதித்திருக்கும் இந்த அடிப்படைச் சம்ப ளத்தை அந்த ஊழியர்களுக்கு வழங்குகிறார்களா என்பது மிக முக்கிய மான கேள்வி. அமெரிக்க அரசாங்கம் அந்த சம்பள விகிதங்களைப் பரிசோதித்திருக்கிறதா? இந்த வழக்கில் இன்னொரு முக்கியமான விவ காரமும் இருக்கிறது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் தேவயானி புதுதில்லி நீதிமன்றத்தில் தன்னிடம் வேலை செய்த சங்கீதா ரிச்சர்ட் என்ற அந்தப் பெண்ணிற்கு எதிராக ஒரு வழக்கைபதிவு செய்தார். அதில், அந்தப் பெண் அதிகப் பணம் கேட்டு தன்னை துன் புறுத்தியதாகக் கூறியிருந்தார். புது தில்லி நீதிமன்றம் சங்கீதாவிற்கெதி ராக பிணையில் வெளிவரமுடியாத வாரன்ட் பிறப்பித்ததுடன் அவர் தேவயானிக்கெதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு தடை விதித்தது. அமெரிக்க அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை. 

வியன்னா தீர்மானத்தின்படி தூதரக அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டிய சிறப்பு சலுகைகள் எதையும் தேவயானியின் தனிப் பட்ட ஒரு குற்றத்திற்காக அளிக்க முடியாது என்று அமெரிக்க அரசாங்கம் கறாராக கூறிவருகிறது. ஒருவேளை தேவயானி அமெ ரிக்கச் சட்டத்திற்குப் புறம்பாகவே நடந்து கொண்டார் என்றே வைத்துக்கொள்வோம். 


அப்போதுகூட அவர் நடத்தப்பட்ட விதம் என்பது நிச்சயமாக ஒரு நாடு இன் னொரு நாட்டின் தூதர் மீது காட்டவேண் டிய குறைந்தபட்ச மரியாதையைக்கூட காட்டவில்லை. இவ்வளவு மிகையாக இந்த விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவிடம் நடந்துகொள்ள என்ன அவசியம் இருக்கிறது? ஒருவேளை இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடந்து நரேந்திர மோடி போன்ற தனக்கு உவப்பில்லாத ஒருவர் பிரதமராகிவிட்டால் இந்தியாவின் மீது கடுமையான போக்கை கடைப்பிடிக்கவும் இந்தியாவை ப்ளாக்மெயில் செய்யவும் இப்போதே முஸ்தீபாக அமெரிக்கா இந்த வேலைகளைச் செய்கிறதா?

அமெரிக்க உளவுத்துறை நிறுவனம் இந்தியர்களின் கோடிக்கணக்கான மின்னஞ்சல்களை உளவு பார்க்கிறது என்றும், அவர்களைப் பற்றிய தகவல்களைத் திருடுகிறது என்றும் எட்வர்ட் ஸ்னோடன் அம்பலப்படுத்தியபோது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ‘"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை'’என்று சொல்லி அமெரிக்காவிடம் பல்லைக் காட்டினார். இப்போது "இது நமக்கு நடந்த அவமானம்' என்கிறார். உண்மையில் உங்களுக்கு அவமானம் பற்றிய சொரணை எப்போதாவது இருந்திருக்கிறதா? 

தேவயானி விவகாரம் இந்திய அரசாங்கம் அமெரிக்காவிடம் வெளிப்படுத்திய அடிமைப் புத்திக்குக் கிடைத்த பரிசு. 
€€

ad

ad