புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2013




         சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பாலியல் புகார், ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. 

அப்படி என்னதான் அந்தப்பெண் வழக்கறிஞர் தன் புகாரில் சொல்லியிருக்கிறார்?  நாமும் பார்க்கலாம்
.நக்கீரன் 

""நான் கொல்கத்தா நேஷனல் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது நீதிபதி கங்குலியிடம் டெல்லியில் ட்ரெயினிங் எடுத்தேன். அது 2012 டிசம்பர் 24-ம் தேதி.  புதுடில்லி லீ மெரிடியன் ஓட்டலில் தங்கியிருந்த நீதிபதி கங்குலி,  அன்று இரவு அவசர ரிப்போர்ட் ஒன்றைத் தயாரிக்கவேண்டும் என்று அழைத்தார்.  நான் ஓட்டலுக்கு போனபோது மணி 8.30. அப்போது அவரது அறையில் இந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்தைச் சேர்ந்த ஒருவரும்,  பெண் ஸ்டெனோகிராபர் ஒருவரும் இருந்தனர். அவர்களை அறிமுகப்படுத்திவைத்த கங்குலி, "இவர்களுக்கான கேஸ் ரிப்போர்ட்டை நாளை கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டி யிருக்கிறது. எனவே அதை தயாரிக்க எனக்கு உதவி செய். நேரமானாலும் பரவாயில்லை. இங்கேயே தங்கி வேலையை முடித்துவிடலாம்' என்றார். நானோ "என்னால் இரவு தங்கமுடியாது, என் வேலையை சீக்கிரம் முடித்துவிட்டுக் கிளம்புகிறேன்' என்றேன். அவரோ "ராத்திரி தங்குவதால் என்ன ஆகிவிடப் போகிறது?' என்றார்.  நான் "என் விடுதிக்கு போயே ஆகவேண் டும். இங்கே தங்கமுடியாது' என்றேன். அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், அந்தக் கால்பந்தாட்ட நிர்வாகியிடம்,  "இவளுக்கு இங்கே ஒரு அறை போடமுடியுமா' என்றார். அந்த நபர், "உங்களைத் தவிர வேறு யாருக்கும் அறை போட்டுக் கொடுக்க எனக்கு அனுமதி இல்லை' என்றார். 

கங்குலியோ, "உங்கள் மேலதிகாரியிடம் கேளுங்கள்' என்று சொல்ல, அவரும் அந்த ஸ்டெனோகிராபரும் அறை யைவிட்டு வெளியே போனார்கள்.  நானோ "இண்டர்நெட் இங்கே வேலை செய்யவில்லை. அதனால் இப்போது விபரங்களைத் தேடமுடியாது. அதனால் நான் இங்கே தங்குவதால் பயன் இல்லை' என்றேன். கங்குலியோ, "நாளைக்கு கிறிஸ்துமஸ் அல்லவா' என்று பேச்சை மாற்றினார். 

"நீ கிறிஸ்டியன் இல்லையா. நீங்கள் எல்லாம் நள்ளிரவில் சர்ச்சுக்கு போவீர்கள். ஆனால் இன்று அப்படி உன்னால் சர்ச்சுக்குப் போகமுடியாமல் போகிறது' என்றவர், "கிறிஸ்துமஸ் என்றால் குடும்பமாக ஒயின் குடிப்பார்களாமே' என்றார். "ஆமாம்' என்று தலையாட்டினேன். உடனே ஒரு ஒயின் பாட்டிலை என்னிடம் காட்டி, "இது இந்த ஓட்டலின் காம்ளிமெண்ட்.  நீ டயர்டாகி இருப்பாய்.  நீ என் பெட்ரூமில் போய் இதைக்குடித்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு' என்றார். எனக்கு பகீர் என்று ஆனது. "இதெல்லாம் வேண்டாம் சார், உங்கள் வேலையை சீக்கிரமாக முடித்துக் கொடுத்துவிட்டு கிளம்புகிறேன்' என்றேன். அவரோ ஒயின் கிளாஸை என் கையில் திணித்தார்.  அதை வாங்கி கீழே வைத்துவிட்டு லேப்டாப்பில் வேகமாக டைப் செய்ய ஆரம்பித்தேன். அவர் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தார். 

"என், வேலை முடிந்து, விடுதிக்குப் போக கார் வேண் டும்' என்றேன். அவரோ, "உனக்குத் தனியாக ரூம் போட முடி யாது போலிருக்கிறது. பேசாமல் என் ரூமிலேயே இரவு தங்கிக் கொள் ' என்றார். அவர் பேச்சில் நிர்பந்தம் இருந்தது. "இந்த யோசனையை எப்படி உங்களால் சொல்ல முடிகிறது' என சத்தமாகக் கேட்டேன். உடனே என் வேகத்தைப் புரிந்து கொண்டு, "உனக்கு கார் ஏற்பாடு செய்கிறேன்' என்றார். பிறகு ஒயினை கிளாஸில் ஊற்றி ஊற்றிக் குடித்தார்.   நான் சிப் பண்ணி வைத்துவிட்டதைக் கவனித்த கங்குலி, "சீக்கிரம் நீயும் குடி, உன் கிளாஸை நிரப்பவேண்டும்' என்றார். நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அந்த ஒயின் தீர்ந்ததும் ஒயிட் ரம் பாட்டிலை எடுத்து அதையும் ஊற்றிக் குடித்தார். அப்போது அவர் ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்தபடி டின்னர் வந்தது.  

உடனே நான் டைப் செய்துகொண்டிருந்த வட்ட மேஜையை விட்டு எழுந்தேன். சோபாவில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினேன்.  என் அருகில் அமர்ந்து சாப்பிட ஆரம் பித்தவர், ஒரு கையை என் முதுகில் போட்டார். நான் ஆட்சேபம் தெரி விக்கும் விதமாய் சற்று நகர்ந்து அமர்ந்தேன். அப்போதும் அவர் கையை என் மேலிருந்து எடுக்க வில்லை. அப்படியே முன் பக்கமாக நகர்ந்தவர் என்னைக் கட்டியணைக்க முயன்றார். ஆபத்துக் கட்டம் நெருங்கி விட்டதை புரிந்துகொண்ட நான் தள் ளிப்போய் உட்கார்ந்தேன். விரைவாக சாப்பிட்டுவிட்டு, அவருக்கு இன்னும் எப்படி கடுமையாக எதிர்ப்பைக் காட்டுவது என்று யோசித்தபடியே, வட்ட மேஜையில் அமர்ந்து டைப் செய்வதுபோல் பாசாங்கு செய்தேன். 

கங்குலியும் எழுந்து என் முன் வந்து நின்றார். என் தலைமீது கையை வைத்து, "நீ ரொம்பவும் அழகாக இருக்கிறாய்' என்றார். நான் குபீரென எழுந்தேன். உடனே என் கையைப் பிடித்துக் கொண்டவர், "உன் அழகில் நான் கிறங்கிப் போயிருக்கிறேன் என்பது உனக்கும் தெரியும். ஆனால் ஒத்துழைக்க மறுக்கிறாய். இப்போது  நீ என்ன நினைக்கிறாய் என்பதும் எனக்குத் தெரியும் . என்னடா இந்த வயதான காலத்தில் குடித்துவிட்டு, கண்டபடி உளறுகிறானே என்று தானே நினைக்கிறாய். இது உளறல் இல்லை. உண்மை. உன்னை நான் உண்மையாகக் காதலிக் கிறேன். உன்னை உயிருக்கு உயிராக விரும்புகிறேன்' என்றபடி என் கையைப் பற்றி முத்தமிட்டார். அவரைத் தள்ளிவிட்ட நான், "இப்ப வே கிளம்புகிறேன்' என் றேன். என் லேப்டாப்பை யும் கைப்பையையும் எடுத் துக்கொண்டு, விருவிருவென அறையை விட்டு வெளியேறி னேன். லிப்ட்டில் ஏறினேன். பின்னாலே ஓடிவந்த கங்குலியும் லிப்டில் ஏறிக்கொண்டார். அங் கும், "நீ என்னை விட்டுவிட்டுப் போகாதே, எனக்கு உன் உதவி தேவை. நீ இல்லாமல் ரிப் போர்ட்டை முடிப்பது கஷ்டம். எனவே இருந்துவிட்டுப் போ' என்று கெஞ்சினார். நான் காதி லேயே வாங்கிக்கொள்ளாமல் வேகமாக ரிஷப்ஷனுக்கு வந்தேன். 

அங்கே எந்தக் காரும் இல்லை.  என் முகத்தில் தெரிந்த கோபத்தைப் பார்த்த கங்குலி, உடனே போன் போட்டு அந்தக் கால்பந்தாட்ட நபரை அழைத் தார். அவர் வந்ததும், "இந்தப் பெண்ணுக்கு ஒரு காரை ஏற் பாடு செய்து அனுப்பிவிடு' என்றார். கார் வந்தது. அப்போது மணி 10.30. அறைக்குப் போன தும் கங்குலி போன் செய்து, "அறைக்குப் போய்விட்டாயா' என்றார். "ஆமாம்' என்று சொல்லிவிட்டு வைத்தேன், அடுத்தடுத்து போன் போட்டார். நான் எடுக்கவில்லை. மறுநாளும் போன் பண்ணினார். அப்போதும் நான் எடுக்கவில்லை. உடனே ஒரு குறுஞ்செய்தியை எனக்கு அனுப்பி னார். அதில், "நேற்று இரவு நடந்த சம்பவங்களுக் காக வருந்துகிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள் கிறேன். என்னுடன் ஒரு ஐந்து நிமிடம் போனில் பேசு. அடுத்து நான் அழைக் கும்போது, போனை எடுத் துப் பேசு'’என்று தெரிவித் திருந்தார். அவர் போனை கடைசிவரை நான்  எடுக்கவே இல்லை''’என்று சொல்லியிருக்கிறார் அந்த இளம்பெண்.

மேற்குவங்க மனித உரிமை ஆணையத்தின் தலைவராக அவரை நியமித்த முதல்வர் மம்தா பானர்ஜியே, "கங்குலியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்று ஜனாதிபதிக்கு இரண்டு கடிதங் களை எழுதியிருக்கிறார். நாடாளுமன்ற இரு சபை களிலும் கங்குலி மீது நடவடிக்கை கோரி எம்.பி.க் கள் குரல் எழுப்பினர். ஆனால் கங்குலியோ மௌ னம் சாதிக்கிறார் பிடிவாத மாக.   
       

-நமது நிருபர்

ad

ad