புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2013

தளபதி பதுமனை வைத்து அரசு ராஜதந்திர காய் நகர்த்தல் -இன்னும் புலிகள் இருக்கிறார்கள் அதனால் இராணுவம் தேவை என காட்ட  அரசுக்கெதிராக தாக்குதல்கள் நாடகம் நடக்கலாம் 

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலில் கொழும்பு வந்திருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் பதுமன் ஒரு வார காலமாக காணாமல் போயுள்ளதாக கொழும்பின் செய்தி நிறுவன முகவர் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப் படைப் பிரிவின் முன்னாள் தலைவரான கேர்ணல் பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதன் தலைமையில் புலிகளை மீண்டும் உருவாக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ இரகசிய திட்டம் தீட்டி வருவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.
பதுமன் - கோத்தபாய ராஜபக்‌ஷ இரகசியத் திட்டம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த நிலையில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவை தொடர்புகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்த செய்தியின் பின்னணி என்ன என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள கோத்தபாய, இவை வெறும் வதந்திகளைப் பரப்பும் செய்திகள் எனவும், இவற்றில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பதிலளித்துள்ளார். எனினும், கோத்தபாய - பதுமன் கூட்டுத் திட்டம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்குக் கூட தெரியாத வகையில் பாதுகாப்புச் செயலாளர் முன்னெடுத்துள்ளார்.
கோத்தபாய - பதுமன் இரகசிய திட்டம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததை அடுத்து குழப்பமடைந்த பாதுகாப்புச் செயலாளர், பதுமனைத் தொடர்புகொண்டு இதுகுறித்து யாருடனாவது கலந்துரையாடப்பட்டதா எனக் கேட்டுள்ளார். அத்துடன், தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து வெளித் தொடர்புகளை துண்டிக்குமாறும் கோரியுள்ளார்.
ஊடகங்கள் செய்திகள் வந்த நிலையில், குழப்பமடைந்த பாதுகாப்புச் செயலாளர் பதுமனை மேற்குலக நாடொன்றுக்கு அனுப்பிவைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக கடந்த வாரம் பதுமன் கொழும்பு அழைத்துவரப்பட்டிருந்தார். பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் ஏற்பாட்டில், இவர் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
கொழும்பிற்கு அழைத்து தங்கவைக்கப்பட்ட பின்னர், மன்னார் ஊடாக இந்தியாவிற்கு அனுப்பி, அங்கிருந்து மேற்குலக நாடொன்றுக்கு அனுப்பிவைப்பதே கோத்தபாய ராஜபக்‌ஷவின் திட்டமாக இருந்தது. வெளிநாட்டு புலனாய்வு அமைப்பொன்றின் உதவியுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.
சிறிது காலத்தின் பின்னர் முன்னதாக திட்டமிட்டிருந்ததன்படி மீண்டும் ஆயுதப் படையொன்றை உருவாக்கக் கொள்ளலாம் எனவும், ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததால் தற்போது வெளிப்படையாக எதனையும் செய்யக்கூடாது எனவும் தீர்மானித்தே இந்த நகர்வு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், கொழும்பு அழைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த பதுமன் தற்போது திடீரென காணாமல் போயுள்ளமையானது கோத்தபாய ராஜபக்‌ஷ தரப்பினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை இரகசியமாகவும், துரிதமாகவும் கையாள வேண்டிய நிலையில் பாதுகாப்புச் செயலாளர் செயல்பட்டு வருவதாக குறித்த செய்தி முகவர் நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் மீண்டும் புலிகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், வடக்கில் பிரிவினைவாதத்தை தூண்டும் நோக்கில் படையினர் செயல்படுவதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தமை நினைவூட்டத்தக்கது

ad

ad