புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2014


சரத்பொன்சேகா கூட்டமைப்புடன் 10 அம்ச உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார் – விக்கி லீக்ஸ்
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய சரத் பொன்சேகா, யுத்த பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ்
தேசிய கூட்டமைப்புடன் 10 அம்ச உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010 ஆண்டு ஜனவரி ஆறாம் திகதி, எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும், அந்த நாட்களில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்து பற்றீசியா புட்டினிஸிகுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க தூதரகம் அமெரிக்க தலைமையகத்துக்கு அனுப்பி இருந்து இரகசிய ஆவணத்தை விக்கலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி சரத் பொன்சேகா, தென்னாப்பிரிக்காவை போல இலங்கையிலும் உண்மைக்கும், மறுசீரமைப்புக்குமான ஆணைக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று விரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஜனாதிபதி மகிந்தராஜபக் வெளியில் கூறப்படுவது போல மிகவும் கொடூரமானவர் இல்லை என்றும், அவரது சகோதரர்களான பசில் மற்றும் கோட்டாபய ராஜபக்ச அவரை இவ்வாறான ஒரு சிறையில் வைத்திருப்பதாகவும் மங்கள சமரவீர இதன் போது தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வினை வழங்குவதில் ஜனாதிபதிக்கு உடன்பாடில்லை என்றும், மத்திய அரசாங்கத்துக்கே முழுமையான அதிகாரமும் இருக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை 2010 ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி (சரத் பொன்சேகா) வெற்றி பெற்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து ராஜபக் குடும்பமும் முற்றாக ஓரங்கப்படும் என்றும் மங்கள தெரிவித்துள்ளார்.

ad

ad