புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2014


அதிமுகவினர் பணம் விநியோகம் என புகார்: டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு ஒன்றை தாக்கல்
செய்தார். அதில், தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம், காவல்துறையிலும் புகார் அளித்து எந்த நடவடிக்கை எடுக்காததால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் எனறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி அக்னிகோத்ரி, நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்பு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் முறைகேடு புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், தேர்தல் ஆணையம் சரியான முறையில் செயல்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் முடித்து வைத்தனர். 

ad

ad