புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2014


கோபி கோர்ட்டில் பிரேமலதாவிஜயகாந்த் ஆஜர்
பாராளுமன்ற தேர்தலை அடுத்து ஈரோடு மாவட்டம் கோபியில் கடந்த 14–ந்தேதி பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.


பிரச்சாரத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்பட்டது. இதையடுத்து கோபி நகர அ.தி.மு.க. செயலாளர் சையத் புடான்சா பிரேமலதா மீது கோபி போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி கோபி முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. பிரேமலதா  10.25 மணிக்கு கோபி கோர்ட்டுக்கு வந்து ஆஜரானார். இதையடுத்து அவரை பார்ப்பதற்காக தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் தொண்டர்கள் கோர்ட்டு வளாகத்தில் திரண்டனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ராணி அடுத்த மாதம் 12–ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ad

ad