புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2014

news
இந்திய மீனவர்கள் ரோலர் படகுகளை பயன்படுத்தி கடல் வளங்களை அழித்தல், அத்துமீறிய காணி சுவீகரிப்பு, மீனவர்களுக்கு மானிய மண்ணெண்ணெய் வழங்காமை போன்றவற்றை கண்டித்து கையெழுத்து வேட்டை மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
 
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரால் மே மாதம் 3௦ ஆம் திகதி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 2 மணியிலிருந்து 6 மணிவரை இடம்பெறவுள்ள இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  சமயத்தலைவர்கள், நாடாளுமன்ற மந்திரிகள், உறுப்பினர்கள், அரசியல் தலைவர்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
 
இந்த ஊர்வலத்தில் இந்திய மீனவர்கள் ரோலர் படகுகளை பயன்படுத்தி கடல்வளங்களை சூறையாடுதல், எட்டப்பட்ட தீர்மானத்தின் படி மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய மண்ணெண்ணையை தொடர்ந்தும் வழங்குதல், காணி ஆக்கிரமிப்பின் மூலம் விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படுவதை உடன்நிறுத்துதல், இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றுதல் அடங்கிய மனுவும் கையளிக்கப்படவுள்ளது.
 
இதேவேளை எதிர்வரும் 3௦ ஆம் திகதி சமயத்தலைவர்கள், நாடாளுமன்ற மந்திரிகள், உறுப்பினர்கள், அரசியல் தலைவர்களும் இணைந்து ஊர்வலம் வருதல், அதனைத்தொடர்ந்து 1௦௦௦௦ கையெழுத்துக்கள் அடங்கிய மனு கையளிக்கப்படவுள்ளது,
 
அதனை தொடர்ந்து ஒருலட்சம் கையெழுத்து சேகரிக்கும் செயற்பாட்டில் மே மாதம் 31ஆம் திகதி மன்னாரிலும், ஜூன் மாதம் 1 ஆம் திகதி கட்டுநாயக்கவிலும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி நீர்கொழும்பிலும், ஜூன் 13 கல்பிடியவிலும், ஜூன் திருகோணமலையிலும், ஜூன் 21 இல் யாழ்ப்பாணத்திலும் இடம்பெறவுள்ளது.
 
இருப்பினும் அனைத்து பிரச்சனைகளிலும் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டம் குறித்த கையெழுத்து வேட்டையில் சேர்த்து கொள்ளப்படாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முல்லைத்தீவை புறக்கணித்த தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் 

ad

ad