புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2014


மோடியின் அரசால் இலங்கையில் சமஷ்டி தீர்வு கிடைக்கலாம்: எதிர்வு கூறும் இராஜதந்திரிதயா ஜயதிலக 
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாது போனால், இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி சமஷ்டி தீர்வுக்கு கொண்டு செல்லக் கூடும் என முன்னாள்
இராஜதந்திரியும் அரசியல் விமர்சகருமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காங்கிரஸ் அரசாங்கம் இலங்கையில் 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு நின்று கொண்டது.
பாரதீய ஜனதா கட்சியையும் அந்த வரையறைக்குள் நிறுத்திக் கொண்டால் அது இலங்கை பெற்ற வெற்றியாகும்.
இலங்கை குறுகிய காலத்திற்குள் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால், மோடியின் உதவியுடன் ஜெனிவா சவால்களை எதிர்கொண்டு மேற்குலக சவால்களில் இருந்து தப்பிக்கலாம்.
13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாவிட்டால், மோடி அரசாங்கம் காங்கிரஸ் அரசாங்கத்தை போல் வலியுறுத்தி கொண்டிருக்காது. அவர் இலங்கையின் பிரச்சினை தொடர்பில் சமஷ்டி தீர்வுக்கும் செல்லக் கூடும்.
காரணம் இந்தியாவின் சமஷ்டி முறையில் அதிகமான வெற்றியை பெற்றவர் மோடி என்பதை மறந்து விடக் கூடாது எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

ad

ad