புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2014


ஜனாதிபதியுடன் வடக்கு முதல்வர் இந்தியா செல்வது இணக்கப்பாட்டு அரசியலுக்கு வித்திடும்

தமிழர்களின் எஞ்சியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்பை தவறவிடக்கூடாது



தமிழ் மக்களின் எஞ்சியுள்ள பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க வேண்டும் என்ற உண்மையான அக்கறையும் நேர்மையும் இருந்தால் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் வைபவத்தில் கலந்துகொள்ள வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள அழைப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏற்க வேண்டுமென ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மோடியின் தலைமையி லான கட்சி கடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து தான் மோடி அவர்களுக்கு விடுத்த வாழ்த்துச் செய்தியில் இணக்க அரசியலின் மூலமே எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ள இயலுமென குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இது தனது கட்சியின் நடைமுறை சார்ந்த யதார்த்த வழிமுறை என்றும்
இதன் ஊடாகவே எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தான் தீர்த்து வருவதாகவும் எடுத்துக் கூறியுள்ளார். தான் தொடர்ந்து கூறிவரும் நடைமுறை சார்ந்த யதார்த்த வழிமுறைகளை தமது சுயலாபம் கருதி எதிர்த்து வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பின்னர் மக்களால் தாங்கள் புறக்கணிக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தால் தான் கூறிவரும் நடைமுறை சார்ந்த வழிமுறைகளையே பின்பற்றி வருவதையும் அமைச்சர் சுட்டிக்காட்டி யுள்ளார்.
இதன் பிரகாரம் மாகாண சபை முறைமையையும் மாவட்ட ஒருங் கிணைப்புக் குழுக் கூட்டங்களையும் ஏற்றுக்கொண்டதைப் போல் நாடாளு மன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கவும் ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள மேற்படி அழைப்பை ஏற்றுக்கொள்ளவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத் தியுள்ளார்.
ஜனாதிபதியுடன் சென்று மோடி அவர்களின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதன் மூலம் எமது அயல் நாடான இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்தி அதன் ஊடாக எமது மக்களுக்கு தேவையான உதவிகளை பெறமுடியும். இந்திய கடற்றொழிலாளர் களால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அரசியல் தீர்வு உட்பட ஏனைய அனைத்து பிரச்சினைகளையும் சுமுக பேச்சு வார்த்தைகளின் மூலம் நாமே தீர்த்துக்கொள்வதற்கு சிறந்த வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்ள இயலும்.
எனவே எமது மக்களின் மீது உண்மையான அக்கறையும் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற நியாயமான தேவையும் இருப்பின். ஜனாதிபதி அவர்களது அழைப்பை முதலமைச்சர் விக்னேஸ் வரன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad