பிரெஞ்ச் மொழி பாடமாக எடுத்து 500க்கு 500 மதிப்பெண் பெற்ற சென்னை மாணவி படங்கள்
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. இதில் சென்னை கிழக்கு முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஹேமவர்சினி, பிரெஞ்ச் மொழி பாடமாக எடுத்து 500க்கு 500 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அதே பள்ளியில் படிக்கும் எம்.ஹரினி, வி.சவீதா, இ.பிரைசி ஆகியோர் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
அதே பள்ளியில் படிக்கும் எம்.எஸ்.சூர்யா, ஆர்.விக்னேஷ்வரன், ஆர்.பி. தனுஜா, ஆர்.ராஜஸ்ரீ ஆகியோர் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.
சாதனை புரிந்த மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் இனிப்பு வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.