புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2014




""ஹலோ தலைவரே... …  தோல்வியடைந்த தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் ராஜினாமா, கலைஞர் சமாதானம்னு இன்னமும் சாஃப்ட்டான டீலிங்க் தான். ஆனா, ஜெயிச்ச அ.தி.மு.கவில் மந்திரிகள் மாற்றம், மா.செக்கள் நீக்கம்னு அதிரடி ஆக்ஷன் ஆரம்பமாயிடிச்சே!'' 
 நன்றி நக்கீரன்
""அதுதான் ஜெ. ஃபார்முலா.. .. 37 தொகுதிகளில் அ.தி.மு.க ஜெயித்து, பார்லிமெண்ட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் 2 தொகுதியிலும் புதுச்சேரியிலும் தோற்றதற்கு காரணமான நிர்வாகிகள் மேலே நடவடிக்கை, சம்பந்தப்பட்ட மந்திரிகள் நீக்கம்னு அதிரடிகள் தொடருதே!''

""பச்சைமால், தாமோதரன், ரமணா இந்த மூன்று மந்திரிகளும் நீக்கப்பட்டிருக்காங்க. புது மந்திரிகளா கோகுலஇந்திரா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி மூவரும் நியமிக்கப் பட்டிருக்காங்க. அதுபோல தர்மபுரி மா.செ. பாலக்கோடு அன்பழகன் நீக்கப்பட்டு, பொறுப்பாளரா அமைச்சர் பழனியப் பன் நியமிக்கப்பட்டிருக்காரு. ரமணா வை திருவள்ளூர் மா.செ பதவியி லிருந்தும் தூக்கிட்டு அமைச்சர் மாதவரம் மூர்த்திக்குப் பொ றுப்பு கொடுக்கப்பட்டிருக் குது. கன்னியாகுமரியைப் பொறுத்தவரைக்கும் அ.தி.மு.கவுக்கு கிழக்கு, மேற்குன்னு இரண்டு மாவட்ட நிர்வாகம். அதற்கு மா.செ.க்களா இருந்த ஜான்தங்கம், செல்வ ராஜ் இருவரையும் தூக்கிட்டு, தமிழ்மகன் உசேனை இரு மாவட்ட நிர்வாகத்துக்கும் பொறுப்பாளரா நியமிச்சிருக்காரு ஜெ.  புதுவை மாநிலச் செயலாளரான அன்பழகனும் ஓம்சக்தி சேகரும் நீக்கப் பட்டு, புருசோத்தமன் எம்.எல்.ஏவுக்கு புது பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்குது.''


""இதற்கெல்லாம் என்ன காரணம்னு விரிவா சொல்லுப்பா!''

""கன்னியாகுமரிக்கும் புதுச்சேரிக்கும் காரணம் தேவையில்லை. இரண்டிலும் அ.தி.மு.க ஜெயிக்காததுதான் காரணம். கன்னியாகுமரி மேற்கு மா.செ. ஜான்தங்கம் தான் வேட்பாளர். அவரை ஜெயிக்க வைக்கவேண்டிய பொறுப்பு, மந்திரி பச்சைமாலுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே பா.ஜ.க ஜெயிச்சதால சம்பந்தப் பட்டவங்க பதவிகளை ஜெ பறிச்சிட்டாரு. அமைச்சர் பச்சைமால் மேலே 11 குற்றச் சாட்டுகள் தலைமைகிட்டே சொல்லப் பட்டிருக்குதாம். அதில் முக்கியமானது, தொகுதிக்குன்னு கட்சியிலிருந்து ஒதுக்கப் பட்ட 21 கோடியே 10 லட்ச ரூபாயை சரியா விநியோகம் செய்யலைன் னும், அதனாலதான் இரண்டா வது இடம்கூட அ.தி.மு.கவுக்கு கிடைக்காமல் காங்கிரசுக்குப் போயிடிச்சின்னும் புகார் வந்ததால மந்திரி பதவி பறிக்கப் பட்டிருக்குது.'' 

""மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.கவினர் இந்த நட வடிக்கையை எப்படி பார்க்கு றாங்க?''


""பச்சைமாலுக்கு எதிரான கட்சிக்காரங்களுக்கு சந்தோஷம். தொகுதி நிலவரம் பற்றி பேசும் அ.தி.மு.க. காரங்களோ, இங்கே மாநிலக் கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க இரண்டுமே வீக்தான். சட்டமன்றத் தேர்தலில் எல்லா மாவட்டத்திலும் அ.தி.மு.க வலிமையா ஜெயிச்சிருந்தாலும் இந்த மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் ஜெயித்தது. போனமுறை எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க கூட் டணியில போட்டியிட்ட சி.பி.எம் வேட்பாள ருக்கு டெபாசிட்டே போனது. தி.மு.க ஜெயிச்சுது. அப்படியிருந்தும் இந்த முறை எம்.பி தேர்தலில் தி.மு.கவைவிட அ.தி.மு.க நல்ல ஓட்டு வாங்கியிருக்குது. தி.மு.கவுக்கு டெபாசிட் போயிடிச்சி. அ.தி.மு.க கௌரவமா ஓட்டு வாங்கியிருக்குது. இதையெல்லாம் யாரு மேலே எடுத்துச் சொல்றதுன்னு கேட்குறாங்க.''

""புதுச்சேரி நிலைமையும் இதுதானே?''

""புதுச்சேரியில் 1977-க்குப் பிறகு அ.தி.மு.க ஜெயிச்சதே கிடையாது. எம்.ஜி.ஆர் காலத்தி லேயே அங்கே அ.தி.மு.க செல்வாக்கு இழந்துவிட்டது. அப்படியிருந்தும் இந்த முறை தி.மு.க வேட்பாளரை நாலாவது இடத்துக்குத் தள்ளிட்டு அ.தி.மு.க மூணாவது இடத்துக்கு வந்ததே பெருசுன்னு அங்குள்ள அ.தி.மு.கவினர் சொல்றாங்க. அ.தி.மு.க தோற்றுப்போன மற் றொரு தொகுதி தர்மபுரி. இதற்குப் பொறுப் பாளரா இருந்தவர் அமைச்சர் பழனியப்பன். அவரோட பதவி பறிபோகலை. மாவட்ட கட்சிப்பொறுப்பு கூடுதலா கொடுக்கப்பட்டி ருக்குது. மா.செ.வா இருந்த பாலக்கோடு அன்பழகனோட பதவி பறிபோயிடிச்சி. பக்கத்து மாவட்டமான கிருஷ்ண கிரியை சேர்ந்த அமைச்சர் கே.பி. முனுசாமிகிட்டேயிருந்த வெயிட் டான இலாகா பறிக்கப்பட்டு, அவருக்கு டம்மி துறை ஒதுக்கப் பட்டிருக்குது.''

""ஆச்சரியமான நடவடிக்கையா இருக்குதே?''

""மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. வினரும் இதைத்தான் சொல்றாங்க தலைவரே.. … கவுண்ட்டிங் நடக்கும் போது  ஜெ. அடிக்கடி போனில் தொடர்புகொண்டு பேசியது உயர் கல்வித்துறை மந்திரியான பழனியப்பன் கிட்டேதானாம். தர்மபுரி நிலவரம் என்னன்னு கேட்டுக்கிட்டே இருந்திருக்காரு. பா.ம.க லீடிங்னு தெரிந்ததும் செம டென்ஷனாகி கடுமையா டோஸ் விட்டிருக்காரு. பழனியப்பனும் கரூர் செந்தில்பாலாஜியும் ஜெ.கிட்டே தனி செல்வாக்கோடு இருப்பதைப் பார்த்து நால்வர் அணி அமைச்சர்களுக்கு ஒரு பொறாமை இருந்தது. அதனால பழனியப்பனுக்கு எதிரா அப்பப்ப காய் நகர்த்திக்கிட்டு இருந்தாங்க. அவர் டோஸ் வாங்கியதில் நால்வர் அணிக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா, பழனியப்பன் வேற விதமா யோசிச்சி தப்பிச்சிட்டாருன்னு அவரோட ஆட்கள் சொல்றாங்க.''


""அப்படியென்ன யோசிச்சாராம்?''

""ஜெ. டோஸ் விட்டதும், 15 பக்க அளவுக்கு லெட்டர் எழுதி ஜெ.வுக்கு அனுப்பியிருக்காரு பழனியப்பன். அதில், மா.செ. பாலக்கோடு அன்பழகன் வன்னியர்ங்கிறதால அந்தப் பாசத்தில் சரியா வேலை செய்யலைன்னும் அதனாலதான் பா.ம.க ஜெயிக்கிற நிலைமை ஏற்பட்டதுன்னும் சொல்லியிருக்காரு. இதனால ஜெ.வின் கோபம் மா.செ. அன்பழகன் மேலே திரும்பிடிச்சி. அவரைப் பிடித்து டோஸ் விட்டு, மா.செ.பதவியை பிடுங்கிட்டாரு. இத்தனைக்கும் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியிலே 2000 ஓட்டு அ.தி. மு.க.தான் லீடிங். அதேநேரத்தில் கவுண்டரான பழனியப்பனோட பாப்பிரெட்டிபட்டி தொகுதி யில் பா.ம.கவைவிட அ.தி.மு.க 20ஆயிரம் ஓட்டு கம்மி. அப்படியிருந்தும் அன்பழகனிடம் பதவி யைப் பறிச்சி, பழனியப்பன்கிட்டே ஜெ பொறுப்பு கொடுத் திருப்பதை தொகுதியில் உள்ள அ.தி.மு.க வன்னி யர்கள் அதிர்ச்சியோடு பார்க்குறாங்க.'' 

""பழனியப்பன் சிக்கிக்குவாருன்னு நால்வர் அணி எதிர்பார்த்திருந்த நேரத்தில், பழனியப்பனுக் குப் பொறுப்பு கொடுத்த தொகுதி தோற்றுப்போனதால நால்வர் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி யோட இலாகா பறிபோயிருக்குதே?''

""தர்மபுரியில் 2 வருசமா பா.ம.க எலெக்ஷன் வேலை பார்த்தும் அதுபற்றி பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் மந்திரியான கே.பி.முனுசாமி தன்னோட கவனத்துக்கு எதுவும் கொண்டு வரலைங்கிறதில் ஜெ.வுக்கு படுகோபம். அதோடு, தேர்தல் நேரத்தில் கிராமத்து பேச்சுவழக்கில் ஜெ.வின் சர்வாதிகாரத்தனம் பற்றி மற்றவங்ககிட்டே கமெண்ட் அடிச்சாராம் முனுசாமி. கொடநாட்டில் ஜெ. இருந்தப்ப இந்தப் புகாரும் அவர் கவனத்துக்குப் போயிருக்குது. எல்லாத்துக்கும் சேர்த்துதான், அவரிடமிருந்த உள்ளாட்சி நிர்வாகத்தை பறிச்சிட்டு, தொழிலாளர் நலனை மட்டும் விட்டு வச்சிருக்காரு ஜெ.''

""ஏற்கனவே கே.பி.முனுசாமிக்கு சட்டத்துறையைக் கொடுத்தப்பவே அடுத்து அவர்தான் ஹிட் லிஸ்ட்டில் இருக்காருன்னு சக மந்திரிகள்கிட்டே பேச்சு இருந்ததுப்பா.. அதாவது, சட்டமந்திரியா நியமிக்கப்பட்டவங் களுக்கெல்லாம் அடுத்த மாற்றத்தில் பதவி போயிருக்குது. முனுசாமிக்கு அந்தளவு பாதிப்பில்லை. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுன்னு சொல்ற மாதிரி, இலாகா மாற்றத்தோடு தப்பிச்சிட்டாரு. அவர்கிட்டே இருந்த உள்ளாட்சித்துறை இப்ப வேலுமணிக்குக் கிடைத்திருக்குது. சசிகலா உறவினரான ராவணனோட ஆளுங்கிறதால ஏற்கனவே பதவி பறிக்கப்பட்டவர்தான் வேலுமணி. இந்த முறை, அ.தி.மு.க.வுக்கு வெற்றிவாய்ப்பு கம்மின்னு சொல்லப்பட்ட கோவையில் இரட்டை இலையைத் துளிர்க்க வைத்த சாமர்த்தியத்துக்காக அவருக்கு இந்தப் பதவி தரப்பட்டிருக்குதாம்ப்பா..'' 

""எனக்கும் தகவல் கிடைச்சுதுங்க தலைவரே.. .. மத்திய சென்னையில் தயாநிதி மாறன் தோற்குமளவுக்கு தேர்தல் வேலை செஞ்சதுக்காக கோகுல இந்திராவுக்கு மறுபடியும் மந்திரி பதவி கிடைச்சிருக்குது. இந்த முறை அவருக்கு கைத்தறித்துறை. அதுபோல திருவண்ணாமலையில் அ.தி.மு.க ஜெயிச்சதால அக்ரி கிருஷ்ணமூர்த்தி மறுபடியும் மந்திரியாகியிருக்காரு. இதெல்லாம் ஒரு பக்கம்னா, ஈரோட்டில் அ.தி.மு.க அபாரமா ஜெயிச்சிருந் தாலும், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன் சரியா வேலை செய்ய லைன்னு ரிப்போர்ட் போயிருக்குது. அதோடு, அவர் வசமிருந்த வேளாண்துறையையும் செகரட்டரிகள்தான் கவனிச்சிக்கிட்டிருந்தாங்களாம். பெர்ஃபார்மன்ஸ் சரியா இல்லைங்கிறதால பதவி காலியாயிடிச்சி.''

""திருவள்ளூர் அ.தி.மு.க எம்.பிதான் அதிக லீடிங்கில் ஜெயிச்சிருக்காரு. அதுபோல ரொம்ப டஃப் ஃபைட்டா இருந்த ஸ்ரீபெரும்புதூரிலும் அ.தி.மு.க ஜெயிச்சிடிச்சி. அப்படியிருந்தும் இரண்டு தொகுதிகளுக்கும் பொறுப்பாளரா இருந்த ரமணாவை அமைச்சர் பதவியிலிருந்தும் மா.செ. பதவியிலிருந்தும் தூக்கிட்டாரே ஜெ.?''

""இது வேற காரணம்ங்க தலைவரே.. .. ரமணாவோட இரண்டாவது மனைவி சம்பந்தப் பட்ட ஒரு புகார், கார்டன் கவனத்துக்குப் போயி ருக்குது. பெண்கள் சம்பந்தப்பட்ட புகார்களில் சிக்குபவர்களை உடனடியா தண்டிப்பதை ஜெ. வழக்கமா வச்சிருக்காரு. அதுதான், ரமணாவோட பதவியை காலி பண்ணிடிச்சி. இதுபோல இன்னும் சில அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட 8 பேர் மேலே புகார் இருக்குதாம். அவங்களெல்லாம் எப்ப அதிரடி நடவடிக்கை இருக்குமோன்னு அதிர்ச்சியில் இருக்காங்க.'' 

""அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களும் ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு சந்திச்சாங்களே.. ஜெ.வின் அட்வைஸ் என்னவாம்?''

""உங்களை நம்பி மக்கள் ஓட்டு போட்டி ருக்காங்க. மக்களுக்கு நம்பிக்கையா நடந்துக் குங்கன்னு ஜெ. சொல்லிட்டு, குரூப் போட்டோ எடுத்துக்கிட்டாரு. தொகுதி பொறுப்பாளரா இருந்த அமைச்சர்கள்கூட இந்த சந்திப்பின் போது இல்லை. அவங்களையெல்லாம் அ.தி. மு.க ஆட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவுக்காக ஊர் ஊராகப் போய் செய்தி- மக்கள் தொடர்புத்துறை தயாரித்த படங்களை ஒளிபரப்பச் சொல்லிட்டாராம் ஜெ.'' 

""மோடிக்கு ஜெ. வாழ்த்து கடிதம் எழுத, மோடியும் மறுநாள் ஜெ.வை போனில் தொடர்புகொண்டு பேசியிருக்காரே? மத்திய அரசுடன் இணக்கமான போக்கு இப்போ தாவது இருக்குமா?''

""அ.தி.மு.க எம்.பிக்களெல் லாம் அதைத்தான் எதிர்பார்க்கு றாங்க. இணக்கமான போக் கோடு, அமைச்சரவையிலும் சேரும் வாய்ப்பிருந்தா சென்ட்ரல் மினிஸ்டர் சான்ஸ் கிடைக்கும்ங் கிறதுதான் அவங்க எதிர்பார்ப்பு. அதே நேரத்தில், காங்கிரஸ் குறைந்த எண்ணிக்கையில் ஜெயித்திருப்பதால எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கும் வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட நிலையில் அ.தி.மு.க, திரிணாமூல் காங்கிரஸ், பிஜூஜனதாதளம் மூன்றும் ஒரு கூட்டமைப்பா பார்லிமெண்ட்டில் செயல்பட்டால் அந்தக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க வாய்ப்பிருக்குதுன்னும், அதில் அதிக சீட்டுகளைக் கொண்ட கட்சியான அ.தி.மு.கவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும்னும் கார்டன் வட்டாரத்திலிருந்து சொல்றாங்க. அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தால், தம்பிதுரை எதிர்க்கட்சித்தலைவராவார். மம்தா கட்சி எம்.பிக்கு துணை சபாநாயகர் பதவின்னும் திட்டமாம்.'' 

""ஓ''…

""இதற்கிடையிலே, தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்குத் தான் இப்படிப்பட்ட எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும்னும், தேர்தல் முடிவுகள் வந்தபிறகு இப்படி கூட்டு சேர்ந்து எதிர்க்கட்சியாக முடியாதுன்னும் சிலர் சொல்றாங்க. அப்படியொரு நிலை வந்தால், தேர்தலுக்கு முன்பே ஜெ. பிரதமராக ஆதரவுன்னு மம்தா சொன்னதை எடுத்துக்காட்டி அப்பவே கூட்டணிதான்னு வாதம் செய்யவும் அ.தி.மு.க தரப்பு ரெடியாகுதாம். எதிர்க்கட்சித்தலைவர் பதவி யாருக்குன்னு முடிவு செய்ற அதிகாரம் சபாநாயகருக்குத்தான் உண்டு. அதனால புது சபாநாயகர் தேர்வானபிறகு இந்த விஷயம் வேகமெடுக்கும்.''


""பா.ஜ.கவுக்குப் போட்டியா நின்ற கட்சிகளெல்லாம் எதிர்க்கட்சி அந்தஸ்து, துணை சபாநாயகர் பதவின்னு குறி வைக்குது. கூட்டணிக்காக பாடுபட்ட விஜயகாந்த்தின் தே.மு.தி.கவுக்கு எதுவும் இல்லையே?''

""தலைவரே.. பொள்ளாச்சியில் ஷூட்டிங்கில் இருந்த விஜயகாந்த்தை 17-ந் தேதியன்னைக்கு பொன்.ராதாகிருஷ்ணன் சந்திச்சப்ப அங்கிருந்து மோடிகிட்டேயும் ராஜ்நாத்சிங்கிட் டேயும் போன்போட்டு, விஜயகாந்த்தை பேச வைத்திருக் காரு. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தமிழகத்தில் நான் கூட்டணி வைத்தபிறகுதான், ஆந்திராவில் தெலுங்குதேசம் உங்களோடு கூட்டணிக்கு வந்தது. அதனால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்குதுன்னு பா.ஜ.க.விடம் சொல்லியிருக் கும் விஜயகாந்த், தேர்தலில் ஜெயித்தாலும் ஜெயிக்காவிட் டாலும் தே.மு.தி.க.வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டுன்னு ஏறக்னவே சொல்லியிருக்கீங்க. அதன்படி வெளி மாநிலம் ஒன்றிலிருந்து சுதீஷை எம்.பியாக்கி மந்திரி பதவி கொடுங் கன்னு கேட்டிருக்காரு. அதோடு திங்களன்று விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் மூவரும் டெல்லி ஃப்ளைட் டில் ஏறிட்டாங்க. இதற்கிடையில், தமிழக பா.ஜ.க.வின் பிரதிநிதியா பொன்.ராதாகிருஷ்ணனுக்குத் மந்திரி பதவி கிடைக்கும்ங்கிறதால, கட்சி யின் மாநிலத்தலைவரா வானதி சீனிவாசனைக் கொண்டு வர காய் நகர்த்தப்படுதாம்.''

""நான் ஒரு தகவல் சொல்றேன்.. தி.மு.க தரப்பில் நடக்கும் உள்விவகாரங் களை அ.தி.மு.க தலைமையும் ஆளுங்கட்சி பிரமுகர்களும் ரொம்பவே ரசிக்கிறாங்க. தேர்தல் வெற்றியைவிட அவங்களுக்கு இதுதான் அதிக சந்தோஷத்தைத் தருதாம். நால்வர் அணி அமைச்சர்கள் பேசிக்கிற போது, மோடிக்கு எதிரா சோனியா இருந்த வரை ஃபைட் நல்லா இருந்தது. ராகுலை முன்னிறுத்தியதும் மோடி ஈஸியா அடிச் சிட்டு வந்துட்டாரு. அதுபோல இங்கே நம்ம அம்மாவுக்கு எதிரா கலைஞர் அஸ்தி ரங்களை வீசுனப்ப கஷ்டமாத்தான் இருந்தது. ஸ்டாலின் ஃபீல்டுக்கு வந்ததும் போட்டியே இல்லாம தூள் கிளப்பிட் டோம்னு சொல்றாங்களாம்.'' 


 மோடியின் அமைச்சரவை!

பா.ஜ.கவின் புதிய எம்.பிக்கள் கூடுவதற்கு முதல்நாள் இரவே புதுடெல்லியில் அமைச்சரவை பட்டியல் பற்றிய விவரங்கள் கசியத் தொடங்கிவிட்டன. நம் கைக்கும் கிடைத்த அந்த உத்தேச பட்டியல். இவற்றில் சில கடைசி நேரத்தில் மாறுதலுக்குள்ளாகலாம்.
நரேந்திர மோடி-பிரதமர், அருண்ஜெட்லி-நிதி/சட்டம், சுஷ்மாஸ்வராஜ்-வெளியுறவு, ராஜ்நாத் சிங்- உள்துறை, முன்னாள் தளபதி வி.கே.சிங்-ராணுவம், கோபிநாத் முண்டே-விவசாயம், நிதின் கட்காரி-ரயில்வே, ராஜீவ் பி ரூடி- விமானப் போக்குவரத்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத்-விளையாட்டு, அனுராக் தாக்கூர்- இளைஞர் நலம், ஆனந்த் கீட்டி-சுற்றுலா, தெலுங்குதேசம்-தொலைத் தொடர்பு, தெலுங்குதேசம்- நிலக்கரி, சிவசேனா- சாலை மேம்பாடு, ஸ்மிரிதி இரானி-பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்கள் நலம், சிவசேனா-நாடாளுமன்ற விவகாரம், அகாலிதளம்-தொழிலாளர் நலன், எடியூரப்பா(அ) சதானந்த கவுடா-பெட்ரோலியம்.


 லாஸ்ட் புல்லட்!

டெல்லியில் ராஜ்நாத்சிங்கை சந்தித்தார் வைகோ. அவருடைய தோல்வி பற்றி ராஜ்நாத்சிங் கவலைப் பட்டிருக்கிறார். குஜராத் மாநிலத் திலிருந்து ராஜ்யசபா எம்.பி.யாகி அமைச்சரவை யில் இடம் பெறுவது பற்றி வைகோ ஆலோ சித்துள்ளார் என செய்திகள் வெளியாக, "இல்லை.. இல்லவே இல்லை. எனக்கு அப்படிப்பட்ட ஆசையில்லை' என்று மறுத்திருக்கிறார் வைகோ.


தர்மபுரியில் வெற்றிபெற்ற அன்புமணி தனது அப்பா ராமதாஸிடம் தைலாபுரத்தில் ஆசி வாங்க கோ.க.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோருடன் வந்தார். அப்போது ராமதாஸ் தாடியுடன் தளர்வாக இருந்திருக்கிறார். மகனுக்கு உச்சிமோந்து ஆசிர்வாதம் வழங்கிவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டாராம். மூர்த்தி உள்ளிட்ட பா.ம.க வேட்பாளர் கள் பலரும் தங் கள் தொகுதியில் வன்னியர் சங் கம் சரியாக வேலை செய்ய வில்லை என அதன் தலைவர் காடுவெட்டி குரு மீது கோ பத்தில் உள்ளன ராம்.

நாடாளுமன்றத்தில் மக்களவை அ.தி.மு.க தலைவராக தம்பிதுரையும், மாநிலங்களவைத் தலைவராக மைத்ரேயனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற பொறுப்புகளுக்கான எம்.பிக் களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுபான்மை சமுதா யத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா, மனோஜ்பாண்டியன், ரபிபெர்னார்டு ஆகியோருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. மோடியுடனான நல்லுறவை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளாராம் ஜெ.

காங்கிரசின் படுதோல்வி யையடுத்து, சோனியாவும் ராகுலும் தங்களின் கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்ய காரிய கமிட்டி கூட்டத்தில் முன்வந்த போதும், அதனை ஏற்க கட்சி தயாராக இல்லை.

தமிழகத்தில் சோனியா பிரச்சாரம் செய்த ஒரே தொ குதியான கன்னியாகுமரியில் இரண்டாவது இடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், தமிழக காங் கிரஸ் தலைவர் பதவி தனக்குக் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் உள்ளார்.

ad

ad