முதல்வர்களாக பெண்கள் .குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல் அமைச்சராக பதவியேற்றார் ஆனந்திபென் படேல்
இந்த கூட்டத்தில் மாநில வருவாய்த்துறை மந்திரியும், மோடியின் இடதுகரம் என வர்ணிக்கப்படுப
வருமான 73 வயது ஆனந்தி பென் படேல், குஜராத் முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைதொடர்ந்து இன்று ஆனந்திபென் படேல் குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் கமலா பெனிவாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் குஜராத்தின் முதல் பெண் முதல் அமைச்சர் என்ற பெயரை ஆனந்தி பென் படேல் பெற்றார்.
பதவியேற்பு விழாவில் ராஜ்நாத் சிங், அத்வானி, சுஷ்மா சுவராஜ், நரேந்திர மோடி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆனந்தி பெண் குஜராத் மாநிலத்தின் 15 வது முதல்-மந்திரி ஆவார். கடந்த 13 ஆண்டுகளுக்கு பின்னர் குஜராத்தின் புதிய முதல் அமைச்சராக ஆனந்திபென் படேல் பதவியேற்றுள்ளார்.