முன்னாள் மாகான சபை உறுப்பினரால் மானிட வைக்கப்பட்ட ஆசிரியை வறிய மாணவரின் கல்விக்காக நிதியம் ஆரம்பிக்கிறார்
நீதிமன்றத்தின் உத்தரவின் படி தமக்கு கிடைத்த நட்ட ஈட்டைக்கொண்டு நிதியம் ஒன்றை ஸ்தாபித்து வறிய மற்றும் கல்வியில் திறமை மிக்க மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக நவகத்தேகம நவோத்திய பாடசாலையின் முன்னாள் ஒழுக்காற்று குழு பொறுப்பாசிரியர் சுசிலா ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் பாடசாலை வளாகத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவினால் பலவந்தமாக முழந்தாழிடப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று இடம்பெற்றது.
இதன்போது முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு 7 வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.
இதுதவிர, மனுதாரரான ஆசிரியைக்கு 3 லட்சம் ரூபா நட்ட ஈட்டை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.
அந்த நிதியை வைத்து வறிய மாணவர்களின் கல்வி ஈடேற்றத்திற்கு உதவி வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.