புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2014

காணாமல் போனோர் தொடர்பில் புதிய இணையத்தளம்
                     
காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது www.pcicmp.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திணை ஆரம்பிக்கவுள்ளது.
 
சுரனிமல பிளேஸ் இல 9/8 கொழும்பு 6 இல் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் மே மாதம் 20 திகதி காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதாக காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச.டபிளியு.குணதாச தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்-
 
இந்த இணையத்தளத்தின் ஊடாகப் பொதுமக்கள் ஆணைக்குழு தொடர்பான அரச வர்த்தமானி அறிவித்தல், ஆணைக்குழுவிற்கான அதிகாரங்கள்,ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யும் விதிமுறைகள், பொதுசன அமர்வுகள் பற்றிய விபரங்கள், விசாரணைச் செயல்முறைகள் போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
 

ad

ad