புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2014



பி ஜே பி ஆட்சி     --  ஒரு பார்வை 
கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் இந்தியாவில் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையை கால் நூற்றாண்டுக்குள்ளாக முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது 16-வது மக்களவைத் தேர்தல். தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 272 எம்.பிக்களுக்கும் கூடுதலாகப் பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க). அக்கட்சிக்கு 282 இடங்களும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (தே.ஜ.கூ) மொத்தமாக 328 இடங்களும் கிடைத்துள்ளன. இதன் காரணமாக, தனித்தே ஆட்சியமைக்கலாம் என்ற பலம் பா.ஜ.கவுக்குக் கிடைத்துள்ளது. எனினும் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை குடியரசுத்தலைவரிடம் அளித்து ஆட்சியமைக்கும் உரிமையை அக்கட்சி பெற்றது. இந்தியாவின் புதிய பிரதமராகியுள்ளார் நரேந்திர மோடி.

கடந்த பத்தாண்டுகளாக (2004-2014) இந்தியாவை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐ.மு.கூ) மீது பரவலான அதிருப்தி ஏற்பட்டிருந்தது. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் ஐ.மு.கூ அரசு உள்ளாகியிருந்தது. அதன் கூட்டணிக் கட்சிகளே ஒவ்வொன்றாக ஆதரவை விலக்கிக்கொண்டன. எனவே, இந்தத் தேர்தலிலில், கடந்த பத்தாண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க தனது கூட்டணி பலத்துடன் வெற்றி பெறும் என்ற கருத்து நிலைத்திருந்தது. பா.ஜ.க சார்பில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார். குஜராத்தை இந்தியாவிலேயே வளர்ச்சி பெற்ற மாநிலமாக அவர் மாற்றியிருக்கிறார் என்றும் அதுபோல இந்தியாவையும் ஊழல்களிலிலிருந்து மீட்டு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வார் என்றும் பா.ஜ.க சார்பில் ஊடகங்களில் பெருமளவிலானப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான பத்தாண்டுகால ஆட்சி மீது பா.ஜ.க தரப்பு வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் காங்கிரசாலும் அதன் கூட்டணிக் கட்சிகளாலும் சரிவர பதில் கொடுக்க முடியவில்லை. 

இந்திய அளவில் பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ, காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ என இரு அணிகள் போட்டியிட்டாலும் அந்தந்த மாநிலங்களிலும் செல்வாக்குள்ள கட்சிகள் தனித்தோ, கூட்டணி அமைத்தோ களம் கண்டன. இதில் பெரும்பாலான கட்சிகளை இணைத்து மூன்றாவது அணியை உருவாக்க இடதுசாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. புதிய அரசியல் கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் தேசிய அளவில் தனித்துக் களமிறங்கியது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியாவின் 16-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. முடிவுகள் வெளியானபோது பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.கவுக்கும் அதன் கூட்டணிக்கும் பெரிய அளவிலான வெற்றி கிடைத்தது. 



குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பா.ஜ.கவே வென்றது. மாநில முதல்வரும் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி குஜராத்தின் வதோதரா (பழைய பரோடா) தொகுதியில் 5 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குஜராத்தில் முழுமையான வெற்றி பெற்றதுபோலவே ராஜஸ்தான் (25), டெல்லிலி (7), உத்தரகாண்ட் (5), இமாச்சல பிரதேசம்(4), கோவா(2) ஆகிய மாநிலங்களிலும் முழுமையான வெற்றியைப் பெற்றது பா.ஜ.க. அக்கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெறும் மத்தியபிரதேசத்தில் மொத்தமுள்ள 27 இடங்களில் 25 இடங்களை பா.ஜ.க வென்றுள்ளது. சட்டீஸ்கரிலும் பா.ஜக ஆட்சிதான். அங்குள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை பா.ஜ.க வென்றது. 

ஜார்கண்ட் மாநிலத்தின் 14 தொகுதிகளில் 12 பா.ஜ.கவுக்குக் கிடைத்துள்ளது. 

இந்தியாவின் மத்திய அரசைத் தீர்மானிப்பதில் 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேசத்திற்கு முக்கிய பங்கு உண்டு. மாநில ஆளுங்கட்சியான சமாஜ்வாடி, எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி இவற்றுடன் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, புதிய கட்சியான ஆம்ஆத்மி மற்றும் சில கட்சிகள் இங்கு போட்டியிட்டன. அதில் 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்று மற்ற கட்சிகளுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. உ.பியில் உள்ள வாரணாசி தொகுதியிலும் மோடி போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, தான் வழக்கமாகப் போட்டியிடும் ரேபரேலிலி தொகுதியிலும், துணைத்தலைவர் ராகுல்காந்தி, தான் வழக்கமாகப் போட்டியிடும் அமேதி தொகுதியிலும் வெற்றிபெற்றதுதான் இம்மாநிலத்தில் அக்கட்சிக்குக் கிடைத்த சொல்லிலிக்கொள்ளக்கூடிய வெற்றியாக இருந்தது. மாநில ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. 

அக்கட்சியின் தலைவரான முலாயம்சிங் யாதவ், மிட்னாபூர் தொகுதியிலிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றபடி அக்கட்சிக்கு சொல்லிலிக்கொள்ளும்படியான வெற்றி கிடைக்கவில்லை. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. உ.பியில் பா.ஜ.க பெற்ற வெற்றிதான், அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பாக அமைந்தது.

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 தொகுதிகள் உள்ளன. இதில் 42 தொகுதிகளை பா.ஜக- சிவசேனா கூட்டணி வென்றது. காங்கிரசுக்கு 2 இடங்களும் அதன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரசுக்கு 4 இடங்களும் கிடைத்தன. மும்பையைத் தலைநகராகக் கொண்ட மராட்டிய மண்ணில் கிடைத்த வெற்றியை பா.ஜ.க உற்சாகத்துடன் கொண்டாடியது.  40 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 22 தொகுதிகளில் வென்றது. ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இம்முறை பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்திருந்தது. பீகார் மாநில ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதாதளம் பெரும் பின்னடைவை சந்தித்ததால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்குமார். காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்த முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதாதளத்திற்குப் பெரிய வெற்றி அமையவில்லை. 13 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க-சிரோண்மணி அகாலிலிதளம் கூட்டணியே அதிக இடங்களில் வென்றது. இந்திய அரசிலின் மாற்று சக்தியாகக் கருதப்பட்ட ஆம் ஆத்மி கட்சிக்கு இம்மாநிலத்தில் மட்டும் 3 தொகுதிகளில் ஆறுதல் வெற்றி கிடைத்தது. பக்கத்து மாநிலமான ஹரியானாவின் 10 தொகுதிகளில் 7 இடங்கள் பா.ஜ.கவுக்குக் கிடைத்தது.

 பா.ஜ.க அவ்வளவு செல்வாக்கு பெறாத மாநிலமான அசாமில் 14-இல் 7 தொகுதிகளை அக்கட்சி வென்றெடுக்க, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் தருண்கோகாய் ராஜினாமா செய்ய முன்வந்தார். ஏழு சகோதரிகள் எனப்படும் திரிபுரா, நாகலாந்து, மணிப்பூர், அருணாசலப்பிரதேசம், சிக்கிம், மேகாலயா உள்ளிட்ட சிறிய மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு பெரிய வெற்றி கிடைக்காவிட்டாலும் அங்கும் ஒரு சில தொகுதிகளை அதனால் பெற முடிந்திருக்கிறது. இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் 6 தொகுதிகள் உள்ளன. இதில் 4 தொகுதிகளை பா.ஜ.க வென்றது. 

பா.ஜ.க.வால் வெற்றிபெற முடியாமல் போன மாநிலங்களில் முக்கியமானது மேற்குவங்காளம். 42 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 34 இடங்களில் வெற்றி பெற்றது. மேற்குவங்கத்தை 35 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகள் அணிக்கு இரண்டே இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க நினைத்த இடதுசாரிகளால் தங்களின் சொந்த செல்வாக்கு உள்ள மாநிலத்திலேயே வெற்றிபெறும் வாய்ப்பு அமையாததால் தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தைக் காப்பாற்றுவதற்கான நெருக்கடிக்குள்ளாக நேர்ந்துள்ளது. மேற்குவங்கத்தில் பா.ஜ.க, காங்கிரஸ் உள்பட எந்தக் கட்சியாலும் மம்தாவின் செல்வாக்கை மீறி வெற்றி பெறமுடியவில்லை. மம்தா கட்சியினர் மேற்கொண்ட தேர்தல் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என இடதுசாரிகள் குற்றஞ்சாட்டியதுடன் நாடு தழுவிய அளவில் போராட்டமும் நடத்தினர். 

பிற மாநிலங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.கவின் அலையைத் தடுத்து நிறுத்திய மாநிலங்களில் மற்றொன்று, ஒடிசா. இங்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. சட்டமன்றத்திற்குத் தொடர்ந்து நான்காவது முறை -யாக ஆளுங்கட்சியாக வெற்றி பெற்றது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளம். மாநிலத்தில் உள்ள 22 எம்.பி. தொகுதிகளில் 21 தொகுதிகளை அக்கட்சியே வென்றுள்ளது.

மத்திய அரசைத் தீர்மானிப்பதில் தென்னிந்திய மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆந்திரபிரதேசம் இம்முறை சீமாந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்களாக நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்ததுடன், அம்மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. சீமாந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்குதேசம் கட்சி ஆட்சியைப்பிடித்தது. 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் இக்கூட்டணியே 17 இடங்களைப் பிடித்தது. காங்கிரசிலிலிருந்து விலகிய ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி மீதமுள்ள 8 இடங்களை வென்றது. மாநில சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.

இந்தியாவின் புதிய மாநிலமான தெலங்கானாவிற்குட்பட்ட 17 நாடாளுமன்றத் தொகுதிகளில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 11 இடங்களை வென்றது. இங்கு பா.ஜ.க கூட்டணியாலும், காங்கிரசாலும் பெரிய வெற்றியைப் பெறமுடியவில்லை. மாநில சட்டமன்றத்திற்கும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியே வெற்றி பெற்றதால் அக்கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் முதல்வராகிறார். 

28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் பா.ஜ.க 17 இடங்களில் வெற்றி பெற, காங்கிரசுக்கு 8 இடங்கள் கிடைத்துள்ளன. மாநிலத்தில் தனிப்பட்ட செல்வாக்குள்ள தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு 2 தொகுதிகள் கிடைத்தன. அதில் ஒன்று, தேவகவுடா வெற்றி பெற்ற தொகுதி. இந்திய அளவில் பா.ஜ.க பெரும் வெற்றி போதும் 20 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் அதற்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள் கிடைக்க, எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் என்ற கௌரவமான வெற்றி கிடைத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றது. இந்த ஒரு தொகுதிதான் இந்தியாவிலேயே அக்கட்சிக்குக் கிடைத்த ஒரே தொகுதி. இந்திய யூனியன் முஸ்லிலீம் லீக், ஆர்.எஸ்.பி. போன்ற கட்சிகளும் இம்மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளன. இடதுசாரிகள் ஆதரவுடன் இரண்டு சுயேச்சைகளும் கேரளாவில் வெற்றி பெற்றுள்ளனர். 

கடந்த இரு மக்களவைத் தேர்தலில் (2004, 2009) மத்திய அரசைத் தீர்மானிப்பதில் முதன்மையாக இருந்த மாநிலம், 39 தொகுதிகளைக் கொண்ட நமது தமிழகம். அருகில் உள்ள புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகள். தமிழகத்தில் இம்முறை பல முனை போட்டி நடந்தது. 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க 37 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீலிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற சிறிய கட்சிகளை கூட்டணி சேர்த்துக்கொண்டு களம் கண்ட தி.மு.க தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு சுமார் 27% வாக்குகள் கிடைத்துள்ள போதும் ஒரு தொகுதிகள் கூட கிடைக்கவில்லை. திராவிடக் கட்சிகளை வீழ்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவானது. தே.மு.தி.க, ம.தி.மு.க, பா.ம.க, புதிய நீதிக்கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்ற இந்தக் கூட்டணி சார்பில் பா.ஜ.கவுக்கு ஒரு தொகுதியும், பா.ம.கவுக்கு ஒரு தொகுதியும் கிடைத்தன. புதுச்சேரியில் என். ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றது. தனித்து நின்ற காங்கிரஸ் கட்சி 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. அதுபோலவே இடதுசாரிகளும் தனித்து நின்று டெபாசிட் இழந்தனர்.

இந்தியாவின் பிரதமர் என தமிழக முதல்வர் ஜெயலலிலிதாவை முன்னிறுத்தி அ.தி.மு.கவினர் பிரச்சாரம் செய்தனர். ஆட்சி இயந்திரம், காவல்துறை ஆகியவற்றை தேர்தலில் தங்களுக்கு சாதகமாக அ.தி.மு.க பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள்குற்றம்சாட்டின. பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது தேர்தல் ஆணையம். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தேர்தலுக்காக 144 உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில், ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடாவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வாக்குகளைப் பெறுவதற்காக பண விநியோகம் நடந்ததை தேர்தல் ஆணையமும் ஒப்புக்கொண்டது. எனினும், அ.தி.மு.க அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தேர்தல் ஆணையத்திடமிருந்து வெற்றி சான்றிதழையும் பெற்றுக்கொண்டது. 37 தொகுதிகள் என்கிற இதுவரை இல்லாத அளவிலான பெருவெற்றியை அ.தி.மு.க பெற்றுள்ளபோதும், மத்தியில் தனி செல்வாக்குடன் பா.ஜ.க வெற்றிபெற்றுவிட்டதால், மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பு அமையவில்லை. இம்முறை, தமிழகத்தின் தயவின்றியே மத்தியில் அரசு அமைந்துள்ளது.

10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக் கூடப் பெறமுடியாமல் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சிக்கு மக்களவையில் 55 எம்.பிக்கள் தேவை. காங்கிரசுக்கு அடுத்த நிலையில் உள்ள அ.தி.மு.க, அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ், பிஜூஜனதாதளம் ஆகிய கட்சிகளின் செயல்பாடுகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முக்கியத்துவம் பெறும். 

புதிய அரசு-வலுவான அரசு இந்தியாவை ஆள வேண்டும் என்ற விருப்பத்தினை வாக்குகளாக அளித்திருக்கிறார்கள் 80 கோடி வாக்காளர்கள். மக்களின் விருப்பத்தினை புதிய ஆட்சியாளர்களும், எதிர்க்கட்சி வரிசையில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குச் செல்பவர்களும் நிறைவேற்ற வேண்டும்.

இந்தியாவின் 16-வது மக்களவைத் தேர்தல்! ஜனநாயகத் திருவிழா தந்த முடிவுகள்!

-----------------------------

 நரேந்திர மோடி



 1950-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வடக்கு குஜராத்தின் மேஹசனா மாவட்டத்தில் வத்நகர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார் நரேந்திர மோடி

 மோடி பிற்படுத்தப்பட்ட சமூகம் (ஓ.பி.சி.) நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்

   அவரது தந்தை பெயர் தாமோதர்தாசு முல்சந் மோதி, தாயார் பெயர் ஹிராபென் ஆவர்.

 தாமோதர் தாஸ் மூல்சந்த் மோடி, ஹிராபென் தம்பதியருக்கு 3-வது குழந்தையாகப் பிறந்தார்

அவரது இயற்பெயர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி.

 1968-இல்  திருமணம் செய்துக்கொண்டார். அவரது மனைவி பெயர் யசோதா பென்

 சிறு வயதில் தனது சகோதரருடன் இணைந்து டீ கடை நடத்தினார்.

  சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்து தனது கல்லூரி பருவத்தில் அந்த அமைப்பின்முழுநேரப் பிரச்சாரகராகப் பயியாற்றினார்.

 குஜராத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து

அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1987-ஆம் ஆண்டு பாஜக-வில் இணைந்து தீவிர அரசியலில் இறங்கினார்.

 1995-ஆம் ஆண்டு குஜராத்தில் பாஜக மூன்றில் இரண்டு மடங்கு

மெஜாரிட்டியைப் பெற்று ஆட்சியை பிடித்தது.
 1998-ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக உயர்ந்தார். 2001 அக்டோபர் வரை இப்பொறுப்பை அவர் வகித்தார். அதன் பின்னர் அவர் குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார்
 முதல்வராக பொறுப்பேற்ற 100 நாட்களிலேயே அவரது தொலைநோக்கும், திறமையும் அனைவராலும் உணரப்பட்டன.
 2002, 2007 தேர்தல் வெற்றிகளைத் தொடர்ந்து 2012-இல் நடந்த தேர்தலிலும் மோடி ஆட்சியை கைப்பற்றினார்.

 மோடியின் தலைமையின் கீழ் குஜராத் மாநிலம் பல்வேறு விருதுகளை உலக 
அளவில் குவித்துள்ளது. ஐ.நா. சசக்வா விருது அதில் ஒன்று. அதேபோல் காமன்வெல்த் பொது நிர்வாக அமைப்பின் விருது யுனெஸ்கோ விருது போன்றவைகளும் அடங்கும்.    

 தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் சிறந்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோடி

சத்பாவனா இயக்கத்தில் தொடர்ச்சியாக பல்வேறு முறை உண்ணாவிரதம் இருந்தார்

 2013 வைப்ரன்ட் குஜராத் நிகழ்வானது 120 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை ஈர்த்தது.
சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார்.
2014-ஆம் ஆண்டு 16-ஆம் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதன்மையேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

 வடோதரா மற்றம் வாரணாசி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 தேர்தலில் பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது.

 16-வது மக்களவையின் புதிய பிரதமராக நரேந்திர மோடி மே 26-ஆம் தேதி பதவியேற்றார்.
 தன் தாய் உயிருடன் இருக்கும்போதே இந்திய பிரதமராக பதவியேற்கும் வாய்ப்பு இதுவரை யாருக்கும் கிடைத்ததில்லை. அந்த பாக்கியம் மோடிக்கு கிடைத்தது.
 மோடி பிரதமராக பதவி ஏற்றதை வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சியில் அவரது தாயார் ஹிராபென் பார்த்தாத் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad