புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2014


 

""ஹலோ தலைவரே... …  லோக்சபாவில் அ.தி.மு.க.வுக்கு 37 எம்.பி.க்கள் இருக்காங்க. ராஜ்யசபாவில் 10 பேர். இப்ப புது எம்.பியா நவநீதகிருஷ்ணன் பதவியேற்கும் வாய்ப்பு உரு வாகியிருப்பதால 11ஆக பலம் கூடுது. மொத்தமா பார்த்தால் 48 எம்.பி.க்கள்.''

""இன்னும் இரண்டு ராஜ்யசபா எம்.பிக்கள் கிடைத்தால் அரை செஞ்சுரின்னு சொல்லு..''

""நவநீதகிருஷ்ணன் எம்.பி.யாவதன் பின்னணியை சொல்றேங்க தலைவரே.. .. தி.மு.க எம்.பி. செல்வகணபதி, அ.தி.மு.க.வில் மந்திரியா இருந்தப்ப சுடுகாட்டு கொட்டகை ஊழல் புகாரில் சிக்கினார். அதுதொடர்பான வழக்கில் அவருக்குத் தண்டனை அளிக்கப் பட்டதால பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்றத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க.வுக்குத்தான் வாய்ப்பு இருக்குது. அதன் வேட்பாளரா முன்னாள் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணனை நிறுத்திட்டாரு. நவநீதகிருஷ்ணனுக்கு நீதிபதியாகணும்னு எதிர்பார்ப்பு இருந்தது. அட்வகேட் ஜெனரலா இருந்த அவரை டி.என்.பி.எஸ்.சி சேர்மனா ஜெ. நியமிச்சார். அதில் அவருக்கு ஆர்வம் இல்லை. எனக்கு ஆக்டிவ்வான போஸ்டிங் கொடுங்கம்மான்னு ஜெ.வை சந்திக்கும்போதெல்லாம் வலி யுறுத்தியிருக்காரு. அதனால அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவ தோடு, அ.தி.மு.க வழக்கறிஞர் அணிச் செயலாளராகவும் நியமிச்சிருக்கார் ஜெயலலிதா.''

""வழக்கறிஞர் அணிக்கு இன்னொரு ராஜ்யசபா எம்.பி.யான மனோஜ்பாண்டியன்தானே செயலாளரா இருந்தாரு. அவர் ஏன் மாற்றப்பட்டாராம்?''

""அ.தி.மு.க.வின் லோக்சபா, ராஜ்யசபா தலைவர், துணைத்தலைவர், கொறடா உள்பட எந்தப் பொறுப்பும் மனோஜ்பாண்டியனுக்குக் கொடுக்கப்படலைங்கிறதை நாமதான் ஏற்கனவே பேசியிருந்தோம். கட்சியிலிருந்தும் கார்டனிலிருந்தும் சசிகலா வெளியேற்றப்பட்டப்ப அவரை கடுமையா விமர்சித்தவர் மனோஜ்பாண்டியனின் அப்பா பி.ஹெச்.பாண்டியன்தான். அந்த சமயத்தில், சசிகலாவுக்கு வேண்டியவங்களோட சொத்துகளை லிஸ்ட் பண்ணி அதை தலைமை சொன்னபடி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் மனோஜ் பாண்டியன்தான். இப்ப கட்சியிலும் கார்டனிலும் சூழல்கள் மாறியிருப்பதால மனோஜ்பாண்டியன்கிட்டே இருந்த கட்சிப்பதவி பறி போயிடிச்சி. சசிகலா நீக்கப்பட்டப்பவும் அவ ருக்கு தீவிர ஆதரவா இருந்த கட்சிக்காரங்களெல்லாம் சமீபகாலமா ரொம்ப உற் சாகமா இருக்காங்க தலைவரே..''

""நவநீதகிருஷ்ணன் எம்.பியா.வதால டி.என். பி.எஸ்.சி.க்கு யார் தலைவராகப் போறாங்களாம்?''

""கோட்டை வட்டாரத்தில் விசாரிச்சேங்க தலைவரே...… முன்னாள் தலைமைச் செய லாளரும் ரிடையர்டான பிறகு ஜெ.வின் அரசு ஆலோசகருமான ஷீலா பாலகிருஷ்ணனை டி.என். பி.எஸ்.சி. தலைவரா நியமிப்பது பற்றி ஆலோசனை நடந்துக் கிட்டிருக்குதாம். ஜெ.வின் குட்புக்கில் ஷீலா இருப்பதால அவருக்கு இந்தப் போஸ்டிங் கிடைத்தால் ஆச்சரியமில் லைன்னும் சீனியர் அதிகாரிகள் சொல்றாங்க.'' 

""ஜூன் 21-ந் தேதி நடக்கவிருந்த அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்தை ஜெ. ஒத்திப் போட்டுட்டாரே!''

""சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.கவை ரெடி பண்ண ஆரம்பிச்சிட்டாரு  ஜெ.. மந்திரிகளும் ரெடியாகிட்டுத்தான் இருக் காங்க. சேலம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மந்திரி எடப்பாடி பழனிச்சாமி, எம்.பி. பன்னீர்செல்வம், மாவட்டத்தில் உள்ள ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களெல்லாம் சமீபத்தில் கூடிப்பேசினாங்க. அப்ப மந்திரி, நமக்கு இன்னும் 23 அமாவாசைகள்தான் இருக்குது. அதில் 3 அமாவாசை தேர்தல் கமிஷன் கன்ட்ரோலில் போயிடும். மிச்சமுள்ள 20 அமாவாசைக்குள்ளே தேர்தல் வேலைகளை சரியா செய்யணும். எம்.பி. தேர்தலில் ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்ததில் 35%தான் நம்ம மாவட்டத்தில் ஒழுங்கா போய் சேர்ந்திருக்குது. அப்படி இருந்தும் இந்த பன்னீர்செல்வம் இவ்வளவு ஓட்டு வாங்கி ஜெயிப்பாருன்னு நாம நினைக்கலை. சட்டமன்றத் தேர்தலில் பட்டுவாடா சரியா இருக்கணும், திட்டங்களெல்லாம் சரியா மக்கள்கிட்டே போய்ச் சேரணும்னு சொல்லியிருக்காரு. இதே விஷயம்தான் செயற்குழுவில் எல்லா மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஜெ. சொல்வாருன்னு எதிர்பார்க்கப்பட்டது. ஆனா, கூட்டத்தை ஒத்தி வச்சிட்டாங்க.''

""இன்னொரு நல்ல நாள் பார்த்து நடத்திட்டாப் போச்சு! அடுத்த தகவல்?''

""நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் 3 இடங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனா, 2003க்குப்பிறகு இதை ஒதுக்கலை. அப்ப இருந்த அ.தி.மு.க ஆட்சியும் அதற்கப்புறம் வந்த தி.மு.க ஆட்சியிலும் இதே நிலைதான் நீடித்தது. திரும்ப அ.தி.மு.க ஆட்சி வந்தும் நிலைமை மாறலை. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை அடுத்துள்ள நகரம்ங்கிற கிராமத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ராமசாமியின் மகள் ஜான்சிராணியும் அவரது கணவர் கருணாகரனும் இரண்டாவது முறையா உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருக்காங்க.'' 

""மருத்துவத் துறை இதை கவனிக்கலையா?''

""சுகாதாரத் துறை அமைச்சர் இப்ப தீவிர ஆலோசனையில் இருக்காராம். அந்த துறையில் உள்ள அதிகாரிகள்தான் இதைப் பற்றி என்கிட்டே சொன்னாங்க. என்ன ஆலோசனைன்னா, தன் துறை சார்பா அம்மா மெடிக்கல்ஸ் ஆரம்பிப்பது சம் பந்தமான ஆலோசனைதான். அதிகாரிகள் கிட்டே ஆலோசிப்பதோடு, மருந்து கம்பெனிகள்கிட்டேயும் பேசிக்கிட்டிருக்காராம்.''


 உஷ்..

மைக் நடிகரின் பெயர் கொண்ட மாண்புமிகுக்கு, நால்வர் டீமிலிருந்து கழற்றிவிடப்பட்டவரின் இலாகாவும் கூடுதலாகக் கிடைத்தது. அதிலிருந்து ஆட்டம் ஜாஸ்தியாம். தனது சொந்த மாவட்டத்தில் உள்ள தனது துறையின் இரண்டு கோட்ட அதிகாரிகளையும் கூப்பிட்டு 3 சி கப்பம் கட்டச் சொல்லியிருக்கிறார். அதிகாரிகள் ஷாக்காக, ஏற்கனவே முடித்த வேலைகள், பழுது பார்த்த வேலைகள் எல்லாவற்றையும் புதிதாக செய்ததாக கணக்குக்காட்டி பில் ரெடிபண்ணி, அதிலிருந்து 3சி கட்டுங்கள் என கறாராகச் சொல்லியிருக்கிறார் மாண்புமிகு. இதுபோலவே மற்ற மாவட்ட கோட்டங்களுக்கும் ஆர்டர் போடப் பட, கிரிவல மாவட்டத்தின் தளபதி நடிகர் பெயர் கொண்ட அதிகாரி, "ஆட்சி மாறினால் நாங்கதான் சிக்குவோம், இந்தப் பொழப்புக்கு ஊருக்குப்போய் விவசாயம் பார்த்து ஒழுங்கா சோறு திங்க லாம்' என சக அதிகாரிகளிடம் புலம்

ad

ad