தி.மு.க.வை வலிமைப்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் மாவட்ட எல்லைகளை மாற்றியமைப்பது குறித்தும் ஆராய்ந்து 15-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க, கல்யாணசுந்தரம், ராஜமாணிக்கம், திருவேங்கடம், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, சச்சிதானந்தம் ஆகிய 6 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தார் கலைஞர். இந்த கமிட்டி, தங்களது ரிப்போர்ட்டை கலைஞரிடம் 14-ந்தேதியே (சனிக்கிழமை) சமர்ப்பித்தது. இதனை யடுத்து பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் சொன்னது போல் தி.மு.க. மாவட்ட கழகங்களை 65 ஆக பிரித்துள்ளார் கலைஞர்.
கமிட்டியின் பரிந்துரைகள்
120 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கலைஞரிடம் தாக்கல் செய்திருக்கிறது குழு. இதில், ஒரு மா.செ.வின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதால் இரண்டு முறைக்கு மேல் ஒருவருக்கு வாய்ப்பு தரக்கூடாது, அதேசமயம், கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன் படுத்தி சிறப்பாக செயல்படும் மா.செ.க்களுக்கு மட்டும் விதிவிலக்காக மேலும் ஒருமுறை வாய்ப்பு வழங்கலாம், அதிகபட்சமான குற்றச்சாட்டுக்கு தற்போது ஆளாகியுள்ள 15-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை அப்பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும், மாவட்டத்தில் கல்யாணம் தொடங்கி காதுகுத்து வரை நடக்கும் விழாக்களுக்கு மக்கள் முகம் சுளிக்கும் வகையில் பிரமாண்டமான கட்-அவுட்டுகள் வைக்கும் செயல்களுக்கு தடை போடவேண்டும், அந்த விழாக் களுக்கு மாவட்ட செயலாளர்களும் அவரது மகன், மச்சான், உறவினர்களும் பிரமாண்டமான போஸ்களில் நடந்து வருவது போன்ற ஆடம்பர பேனர்களும் தவிர்க்கப்படவேண்டும், தற்போது கட்சியின் அடித்தளமான கிளைக்கழகத் தேர்தல் நடந்து முடிந் திருப்பதால் அதன் நிர்வாகிகளைக்கொண்டு ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடத்தப்படக்கூடாது, தற்போதைய மாவட்ட செயலாளர்கள் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் என்பதால் அந்த கிளைக்கழகங்கள் முழுமை யாக கலைக்கப்பட வேண்டும், கிளைக்கழகங்களை ஒழுங்குபடுத்து வது அவசியம், தேர்தலுக்காக அமைக்கப்படும் பூத் கமிட்டிகள் தேர்த லுக்குப் பிறகு கலைக்கப்பட்டுவிடுகிறது. அதை அப்படி செய்யாமல் பூத் கமிட்டிக்கு நிர்வாக ரீதியிலான அங்கீகாரம் தரலாம், ஒரு கிளைக்கழகத் தின் கீழ் 10-க்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகள் வருவதால் அந்த கமிட்டி யின் நிர்வாகிகளை வைத்து கிளைக்கழக செயலாளர்களை தேர்வு செய்யலாம், வாரிசுகளுக்கு பதவிகள் தருவது தடுக்கப்படவேண் டும், கட்சிக்கு துரோக மிழைத்தவர்கள் தண்டிக் கப்பட வேண்டும். சமூக ரீதி யாக பதவிகள் தரப்பட வேண்டும் என்பது உள்பட 13 பரிந்துரைகளை தந்திருக்கிறது கமிட்டி. இதில் எதை எதை நடை முறைப்படுத்துவது என்பதை கலைஞர் தீர்மானிப்பார்.
மாவட்டப் பிரிவினை
11 தொகுதிகள் கொண்ட விழுப் புரத்தில் 3 மாவட்டங்கள் உருவாகிறது. செஞ்சி, திண்டிவனம், மயிலம் ஆகிய 3 தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், கள் ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய 4 தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவி லூர், வானூர் ஆகிய 4 தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும் என 3 மாவட்டங்கள். கடலூரில் உள்ள 9 தொகுதிகளில் திட் டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, சிதம் பரம், காட்டு மன்னார்கோவில் ஆகிய 5 தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆகிய 4 தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும் பிரிந்துள்ளது. கன் னியாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதிகள். இவைகளை விளவங்கோடு, பத்மநாப புரம், கிள்ளியூர் ஒரு மாவட்டமாகவும், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதிகள் மற்றொரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. 6 தொகுதிகள் கொண்ட தூத்துக்குடியை கோவில்பட்டி, ஒட்டபிடாரம், விளாத்திக்குளம் தொகுதி களை இணைத்தும், திருச்செந்தூர், தூத் துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளை இணைத்தும் 2 மாவட்டங்களை உரு வாக்குகின்றனர். இப்படித்தான் அனைத்து மாவட்டங்களிலும் அடங்கிய அரு கருகே உள்ள சட்டமன்ற தொகுதிகளை சேர்த்து புதிய மாவட்டங்கள் உருவாக் கப்பட்டுள்ளது. 72 மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, ""72 என்பது அதிகமாக இருக்கிறது. இந்த எண்ணிக்கையை சற்று குறைக்க வேண்டும்'' என்று சொல்லி வந்த கலைஞர் 65 மாவட்டங்களாக குறைத் திருக்கிறார்.
மா.செ.க்களின் கோபம்
ஆலோசனையில், ""1967-ல் காங் கிரஸ் தோத்தது. அவன் ஜெயிச்சா மந்திரியாயிடுவான், இவன் ஜெயிச்சா மந்திரியாயிடுவான்னு திட்டமிட்டு, ஒவ்வொருத்தரும் குழி பறிச் சாங்க. அதனாலதான் காங்கிரஸ் தோத்தது. அதேபோல, இப்போ 3, 3 தொகுதிகளாக பிரிச்சி சின்ன சின்ன மாவட்டமா புதுசா உருவாக்குனா அவன் இவனையும், இவன் அவனையும் தோக்கடிப்பானுங்களே. அப்போ, எப்படி ஆட்சியை பிடிப்பீங்க? புதுசா போடுற மா.செ.க்கள் ஆளும் கட்சிக்கு விலை போக மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? அதனால், அதிகமான மாவட்டங்களை உருவாக்குவதற்கு பதிலா, ஒவ்வொரு மாவட்டத்தையும் ரெண்டா உடைத்திருக்கலாம் அல்லது அ.தி.மு.க.வுல இருப்பது போல மாத்தியிருக்கலாம்'' என்று காட்டமாக ஒருத்தரோடு ஒருத்தர் பேசிக் கொள்கிற மா.செ.க்கள், ""இதையெல்லாம் நாம் பொதுக்குழு, செயற்குழுவில் பேசணும்'' என்று கோபம் காட்டி வருகிறார்கள்.
ஒதுக்கிவிட வேண்டியதுதான்
மா.செ.க்கள் பேசிக்கொள்வதை அறிந்துள்ள கலைஞரோ, ""பேசட்டும், பேசட்டும். யார்- யாரெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு நினைக்கி றார்களோ, அவங்களையெல்லாம் ஒதுக்கிட வேண்டியதுதான்'' என்றவர் மாற்றப்பட்ட மாவட்ட எல்லைகளை உடனடியாக அறிவிக்க சொல்லி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
""மாநகராட்சி பகுதிகளில் சட்டமன்றத் தொகுதிகள் மிக மிக அருகில் இருப்ப தாலும், அதன் எல்லை கள் சிறியதாகவும் இருப்ப தாலும், குழு பரிந்துரைத்த 72 எண்ணிக்கையை 65 ஆக குறைத்திருக்கிறார் கலைஞர்'' என்கிறார்கள்.
இந்த மாவட்ட பிரி வினைக் குறித்து, ""பரந்து விரிந்த மாவட்ட அதிகாரத் தை 20, 30 வருடங்களாக வைத்திருந்த மா.செ.க்களின் அதி காரம் பறிக்கப்பட்டு அதிகாரம் பரவலாக்கப்பட்டிருப்பதில் 90 சதவீத தொண்டர்களுக்கு மகிழ்ச்சிதான். அதனை எங்களோடு பகிர்ந்து கொண் டிருக்கிறார்கள் உடன்பிறப்புக்கள்'' என்கின்றனர் குழு உறுப்பினர்களுக்கு நெருக்கமான தி.மு.க. வி.ஐ.பி.க்கள்.
ஸ்டாலின் மூவ்
சீனியர் மா.செ.க்களின் குமுறல்களை அறிந்த ஸ்டாலினோ, அவர்களின் அப்-செட்டை போக்கும் வகையில், கட்சி அமைப்பில் 1996-ல் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டபோது, சீனியர் மா.செ.க்களை யெல்லாம் மண்டல செயலாளராக நியமித்தது போல, தற்போது மண்டல அமைப்பாளராக சீனியர்களை நியமித்துவிடலாம் என மூவ் பண்ணி வருகிறார். இப்படி நடந்தால், "முன்னைவிட கூடுதல் அதிகாரம் கொடுத்தது போலாகிவிடும்' என்கிற தகவல் தலைமைக்கு சொல்லப் பட்டதால்... இந்த விவகாரம் ஆலோசனை அளவிலே நிற்கிறது.