புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2014



பொள்ளாச்சியை சூழ்ந்த இருள்மேகம் கடந்த செவ்வாய்க்கிழமை வரை விடிந்தபாடில்லை. வத்சலா, சிந்து (பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன) என்ற 11, 10 வயதுடைய இரண்டு சிறுமிகளை கற்பழித்ததாய் வந்த செய்திகள்தான் பொள்ளாச்சியை இருளில் மூழ்கடித் திருந்தன.
உண்மையில் என்ன நடந்தது? என விவரிக்கிறார் கைது டீமில் உள்ள முக்கிய காவல்துறை அதிகாரி...

""குரு... இந்தப் பெயருடையவன்தான் எங்க ரெண்டுபேரையும் சீரழிச்சது என சிறுமி வத்சலா சொல்லினாள். கூடவே இன்னொரு மாமாவும் இருந்தார் என்றவள்... குரு மாமா உடம்பிலிருந்து குடித்த வாசனையோடு, வேறு ஒரு நாத்தமும் வீசியது என்றாள். அது கஞ்சா என உணர்ந்து கொண்ட நாங்கள்... 6 தனிப் பிரிவுகளாக பிரிந்து குரு என்ற பெயரை வைத்துக் கொண்டு வத்சலாவின் ஊரான கோட்டூரை சல்லடை போட்டுத் துழாவினோம்.

ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளாக ஏறி குரு என்கிற பெயருடையவன் குடித்துக்கொண்டு இருக்கிறானா? என கண்டுபிடிக்க... மப்டியிலும் எங்களது ஆட்கள் இரவு கடை மூடும் வரை பொள்ளாச்சி தெருவெங்கும் குடிகாரனின் தோற்றத்தில் நடமாடினார்கள்.

அப்படி ஒரு பெயரில் ஆளே இல்லை. அப்போது வத்சலாதான் எதையோ மறைக்கிறாள் என நாங்கள் கணித்து வத்சலாவை மறுபடியும் கிளறினோம்.

"சொல்லிர்றேன் சார்... நான் வேணும்னேதான் பேரை மாத்தி சொன்னேன். அந்த மாமா பேரு வீராச்சாமி. இப்போ ஹாஸ்டல்ல தங்கி ஸ்கூலுக்கு போகும் போது வீராச்சாமி மாமா என்கிட்ட வந்து... "வத்சலா தங்கம்... உனக்கு யாருமில்லைன்னு நெனைக் காதே... மாமா நானிருக்கேன். உன்னைய நல்லா படிக்க வச்சு, பெரிய ஆளாக்குவேன்'னு சொன்னாரு. "நல்ல டிரெஸ் எல்லாம் எடுத்து கொடுப் பேன்'னு சொன்னாரு.

இப்படி பேசிட்டேதான் பல நைட்டு ஹாஸ்டல் வரைக்கும் வந்து என்னைய கூட்டிட்டுப் போய் பக்கத்துல இருக்கற பில்டிங் மாடியில் வச்சு தப்பு பண்ணுவாரு.

அன்னைக்கு நைட்டும் அப்படித்தான் தண்ணி கேட்கிறமாதிரி வந்தவரு என்கூட இருந்த சிந்துவை கத்தி முனையில மிரட்டி வாயைப் பொத்தி இழுத்துட்டுப் போனாரு. பின்னாலேயே நானும் அழுதுட்டே போனேன்.

அதே பில்டிங் மாடிக்கு இழுத்துட்டுப் போன அந்த மாமாகிட்ட கெஞ்சுனேன். சிந்து திமிறினா. அந்த மாமா அவளை அடிச்சாங்க. என்கிட்ட பண்ணின மாதிரியே சிந்துகிட்டயும் நடந்துக்க ஆரம்பிக்க... அவளை விட்ருங்க மாமா...ன்னு நான் கெஞ்சுனேன். என்னைய அடிச்சாரு, அடிச்சுட்டு,

"என்ன வத்சலா... நான் உன்னைய படிக்க வச்சு பெரிய ஆளாக்குவேன்னு சொன்னே னில்லை. ஆனா இந்தப் பொண்ணுக்கு யாரு இருக்கறா? இவளையும் நான் படிக்க வச்சு பெரிய ஆளாக்க வேணாமா?' சொல்லிட்டு அவளை என்னென்னமோ கொடுமைப்படுத்தி னாரு.

இரத்தம் கொட்ட கொட்ட மயக்க மாயிட்டா சிந்து. அதுக்கப்புறம் என்கிட்டயும் தப்பா நடந்துட்டிருக்கும் போதே போலீஸ் தேடிட்டு இருக்கறதைப் பார்த்த வீராச்சாமி மாமா... "யாராவது வந்து உன்கிட்ட கேட்டா என் பேரை சொல்லக்கூடாது. உங்க ரெண்டுபேரையும் தூக்கிட்டு வந்தது ரெண்டுபேருன்னு சொல்லணும்'னு கத்தியைக் காட்டி மெரட்டிட்டு போயிட்டார் என்றாள்.

நாங்கள் உடனே பொள்ளாச்சியின் பேருந்து நிலையத்தில் கஞ்சா குடித்து திரியும் ஊதாரிகளையும் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் கோபி நாத் என்பவன் "என் ப்ரண்டு வீராச்சாமிங்கிறவன் அந்த சின்ன பொண்ணுகூட பேசிட்டு இருப்பான்'னு சொன் னான். அதோட அந்த வீராச்சாமி மேல பொள்ளாச்சி டவுன்ஸ்டேஷன்ல திருட்டு கேஸ் இருக்குதுன்னும் சொன்னான். பழைய கேஸ் கட்டை பிரிச்சு பார்த்தப்போ அந்த வீராச்சாமி வால்பாறையைச் சேர்ந்தவன்னு தெரிஞ்சது. அங்கே ஒரு டீமை அனுப்பி பார்த்தப்போ... அவன் பொள்ளாச்சியிலதான் சுத்திட்டு இருக்கறான்னு பதில் வந்துச்சு. அவன் போட்டோவை பிரிண்டு போட்டு பொதுமக்கள்கிட்ட கொடுத்தோம்.

அதே போட்டோவை கொண்டு வந்து வத்சலா கிட்ட காட்டினபோது ஆமாம் இந்த மாமாதான்னு சொன்னா, ஆனா மயக்கத்திலிருந்த சிந்துகிட்ட காட்டி... இவனா?ன்னு கேட்டபோது... "ஆமாம்... இந்த அண்ணா... இந்த அண்ணாதான்... அண்ணா... என்னைய விட்ருங்கன்னு... கெஞ்சினேன்'னு சொன்னபோது நாங்களே அழுதுட்டோம்.

அண்ணா...ன்னு அந்த பொண்ணு சொன்னபோது அந்த வார்த்தைக்கான அர்த்தத்தைக் கூட தெரியாத அந்த மிருகத்தை கைது செய்ய நாங்க எல்லாருமே தூங்காம அவனைத் தேடி பிடித்தோம்.

வீராச்சாமியின் மீது கற்பழிப்பு, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தோம். ஆனாலும் இவனை மனிதப் பிரிவில் மட்டும் சேர்க்கவே முடியாது'' என்கிறார் கண்ணீர்க் கசிய அந்த போலீஸ் அதிகாரி.

இந்த உலகத்தின் ஜீவராசிகள் அனைத்தும் ஆறுதல்களை தேடித்தான் அலைந்து கொண்டிருக்கின்றன. அந்த ஆறுதல்கள் யாரால் கொடுக்கப்படு கின்றன என்பதை தெரியாது போன தால்தான் உடல்ரீதியாக மனரீதியாக பாழாகிப் போய்விட்டன வத்சலா, சிந்து என்ற இரு பிஞ்சுகள்.

அவர்களுக்கான ஆறுதல்கள் இலட்சக்கணக்கான பணங்கள் கொடுக் காது. அந்த இரண்டு பிஞ்சுகளுக்கும் இப் போதைக்கும் மட்டுமல்ல... எப்போதைக்கும் தேவைப்படுவது அன்பு மட்டுமே. அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அந்த பிஞ்சுகளுக்கு அவசரத் தேவையாக அன்பை கொடுங்கள் ப்ளீஸ்.

ad

ad