புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2014

இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதலுக்கு கனடியத் தமிழர் பேரவை கண்டனம் 
அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளிலுள்ள இஸ்லாமியர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் 78 பேர் காயமடைந்துள்ளமை குறித்து க
னடியத் தமிழர் பேரவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
 
சிங்களப் பௌத்த இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டமிட்ட தாக்குதல்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. தாக்குதல்களுக்குப் பொறுப்பான எவரும் இதுவரை விசாரிக்கப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்துக்களையும் கிறித்தவர்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட தமிழர் மீது நடந்த யூலை 83 தாக்குதல்களின் 31ஆவது ஆண்டை நினைவு கூர உலகெங்குமுள்ள தமிழர் ஆயத்தமாகின்றனர். 
 
சிங்கள இனவாதக் காடையர்களால் நடத்தப்பட்ட இத் தாக்குதலில் 3000 இற்கும் அதிகமான தமிழர் கொல்லப்பட்டனர். 
 
இவ்வாறு தொடரும் இன அழிப்பு நடவடிக்கைகளைக் கனடியத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிப்படதோடு கனடாவும் ஏனைய உலகநாடுகளும் சிறிலங்காவுக்கு எதிராய் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது என கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad