வவுனியா நகரசபையில் தற்காலிக சுகாதார ஊழியர்கள் உண்ணாவிரதம்
வவுனியா நகரசபையில் பணியாற்றிய தற்காலிக சுகாதார ஊழியர்கள் ஐந்து பேர், நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2001ம் ஆண்டு மற்றும் 2009ம் ஆண்டு காலப் பகுதியில் நகரசபையில் சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறையாக இருந்த சமயங்களில் தற்காலிக நியமனங்களில் பணியாற்றியவர்களின் பணிக் காலம் நிறைவடைந்துள்ளதாக நகரசபை செயலாளரினால் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
7சுகாதார ஊழியர்களுக்கு இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்படாத போதிலும் இருவர் தொழில் வாய்ப்பின்மை மற்றும் கடன் சுமை காரணமாக வவுனியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு வெளியேறியவர்கள் இன்று இடம்பெறும் உண்ணாவிரத்தில் பங்கேற்கவில்லை என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வவுனியா கிளை இணைப்பாளர் ஆர். சித்திரன் தெரிவித்துள்ளார்.