புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2014


11 மாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
சென்னை 11 மாடி கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5வது நாளாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.



சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரை மட்டமானது. கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி இன்று 5–வது நாளாக நடந்து வருகிறது. கட்டிடம் இடிந்த போது, அங்கு 72 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
துணை ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கமாண்டோ படை வீரர்கள், சென்னை மாநகர போலீசார், தீயணைப்பு படையினர், மெட்ரோ ரெயில் ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 2200 பேர் 11 மாடி கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இரவு–பகலாக இந்த பணி நடந்து வருகிறது.
கான்கிரீட் தளங்களை துளையிட்டு உடைத்து அகற்றி உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று வரை இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 33 ஆக இருந்தது. இன்று பலியானவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.

ad

ad