2 ஜூலை, 2014

சர்வதேச விசாரணையின் போது நிதி வெளிப்படைத்தன்மை அவசியம்: சீனா 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தமது உள்ளக முகாமைத்துவ நிதிகளின் பயன்பாடு குறித்து வெளிப்படைத்  தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று
சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்தும் போது இந்த வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று சீனா கோரியுள்ளது.

கொழும்பில் உள்ள சீன தூதரக அதிகாரி ஒருவர் இது தொடர்பில் கருத்துரைக்கையில் தமது சிரேஸ்ட இராஜதந்திரிகள் இதனை ஏற்கனவே ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழு இரட்டைக் கொள்கைகளை கடைப்பிடிப்பதாகவும் சீன அதிகாரி குற்றம் சுமத்தினார்.