புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 ஜூலை, 2014

கட்சி பேதமின்றி இணைந்து மக்களுக்காக சேவையாற்றுவோம்; அழைக்கின்றார் வேலணை பிரதேச சபை தவிசாளர் 
news
தேர்தல் காலத்தில் கட்சி வேறுபாட்டுடன் வேலைகளை செய்யும் நாம் வெற்றி பெற்றதும் கட்சி பேதமின்றி மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் எனவே தீவக மக்களது தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டு சிறந்த அபிவிருத்தியை காண அனைவரும் ஒன்றினைந்து சேவை செய்வோம் என வேலணைப் பிரதேச சபையின் தவிசாளர் சிவராசா தெரிவித்தார்.

மண்டைதீவு பிரதேச வைத்தியசாலையின் திறப்பு விழா இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்லா வளங்களும் கொண்ட இடமாக மண்டைதீவு யுத்தத்திற்கு முன்னர் இருந்தது. எனினும் தற்போது எல்லா வளங்களையும் இழந்த நிலையில் கவனிப்பாரற்று இந்தப் பிரதேசம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி அடையச் செய்கின்ற பொறுப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமக்கே உள்ளது.  தேர்தல் காலத்தில் கட்சி வேறுபாட்டுடன் வேலை செய்திருந்தோம். இப்போது தேர்தல் முடிவடைந்து நாமும்  மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளோம்.

எனவே கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றினைந்து மக்களுக்கு தேவையான விடயங்களை பூர்த்தி செய்து சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றினைவோம்.

மேலும் தீவக முன்னேற்றம் குறித்து பல திட்டங்களை வடக்கு முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரனிடம் கையளித்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.