புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 ஜூலை, 2014


சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்! பலியானோர் விபரம்!

மலேசிய விமானம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 298 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணம் செய்தவர்களில் 154 பேர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலியா 27, மலேசியா 23, இந்தோனிஷியா 11, பிரிட்டன் 6, ஜெர்மனி 4, பெல்ஜியம் 4, பிலிப்பைன்ஸ் 3, கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் பயணம் செய்துள்ளனர். 50 பேரின் அடையாளம் தெரியவில்லை. 

விமானம் விபத்துக்குள்ளான பகுதியில்தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டர் என்று உக்ரைன் அரசு தரப்பு கூறியுள்ளது. உக்ரைன் ராணுவம் தான் விமானத்தை வீழ்த்தியுள்ளது என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பு கூறியுள்ளது.

விமான விபத்து குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்ததாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். விமான விபத்து குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார்.