புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2014



விபத்துக்குள்ளான மலேசிய விமானத்திற்கு பின்னால் வந்த மோடியின் விமானம் - ஆபத்தான பாதையை தேர்ந்தெடுத்தது ஏன்?: பரபரப்பு தகவல்கள்
298 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் நேற்று இரவு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 283 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தனர்.
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னால் அதே வான்வழியில்தான் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஏர் இந்தியா-001 விமானம் பிராங்ஃப்ர்ட் நகரில் இருந்து 11.22 மணிக்கு புறப்பட்டது. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட 1 மணி நேரத்தில் மோடியின் விமானமும் உக்ரைன் பிளைட் இன்பர்மேஷன் ரீஜனில் பறந்திருக்கும்.
ஆனால், பைலட் சாதுர்யமாக யோசித்து பயணத் தடத்தை மாற்றியதால் மோடி சென்ற விமானத்திற்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று விமான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் படைகளுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் உக்ரைன் மீதான லிவைவ் வழித்தடம், சிம்ஃபெர்பூல் வழித்தடம் ஆகிய இரண்டு மார்க்கங்களிலேயே சென்று வந்தன.
ஆனால் கடந்த ஏப்ரலில் ஐ.நா விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட உத்தரவின் பேரில் அனைத்து விமானங்களும் லிவைவ் வழித்தடத்தை மட்டுமே பயன்படுத்தத் தொடங்கின. பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.நா இந்த உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
ஆபத்தான பாதையை மலேசிய விமானம் தேர்ந்தெடுத்தது ஏன்?: பரபரப்பு தகவல்கள்
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று புறப்பட்டு சென்றது.
உக்ரைன் நாட்டு வான் எல்லையில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, கிழக்கு உக்ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நகருக்கு அருகில் ஏவுகணையின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த கொடூர சம்பவத்தில் 280 பயணிகள் 15 சிப்பந்திகள் என அந்த விமானத்தில் பயணித்த 295 பேரும் உடல் கருகி பலியாகினர்.
ஆசிய கண்டத்தில் இருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டுமாயின், உக்ரைன் வான் எல்லை வழியாக பறந்து செல்வது தூரம் குறைந்த பாதையாக கருதப்படுகிறது.
உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் பல்வேறு உள்நாட்டு விமானங்களை இப்பகுதியில் ஏற்கனவே சுட்டு வீழ்த்தி இருந்ததால், இந்த பாதையை சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பே அவ்வழியாக பறக்கும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆபத்து நிறைந்த பாதை என்பதை அறிந்திருந்தும் 295 உயிர்கள் பலியாக காரணமாக இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அவ்வழியாக சென்றது ஏன்? என இந்த விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த விமானப் போக்குவரத்து பாதுகாப்பு துறை பிரபல பேராசிரியர்களில் ஒருவரான நார்மன் ஷேங்க்ஸ் கூறியதாவது:-
உக்ரைன் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ள கிழக்கு உக்ரைன் பகுதிக்கு மேலே உள்ள வான் எல்லையில் பறப்பதை தவிர்க்க வேண்டும் என்று தான் அனைத்து நாடுகளுக்கும் அறிவுறுத்தல் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து விமான நிறுவனங்களும் எரிபொருள் மற்றும் நேரத்தை சிக்கனப்படுத்தும் பாதைகளை தேர்ந்தெடுப்பதையே விரும்புகின்றன. கிழக்கு உக்ரைனின் வான் வெளியின் மீது பறப்பது ஆபத்து நிறைந்தது; அவ்வழியே பறக்க வேண்டாம் என்று பிரத்யேகமாக எச்சரித்திருந்தால் அவ்வழியே பறப்பதை விமானங்கள் தவிர்த்திருக்கும்.
மேலும், நேற்று அப்பகுதி வழியாக பறந்தது ராணுவ விமானம் அல்ல; பயணிகள் விமானம் என்பதை அறிந்த பின்னரே அதை ஏவுகணையின் மூலம் தாக்கி வீழ்த்தியுள்ளனர். 30 ஆயிரம் அடிகளுக்கு உட்பட்ட உயரத்தில் அந்த விமானம் பறந்த நிலையில் அதன் உருவ அமைப்பை வைத்தே, அது ராணுவ விமானம் அல்ல;
பயணிகள் விமானம் தான் என்பதை கிளர்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கக் கூடும். பயணிகள் விமானம் என்று தெரிந்த பின்னரும் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆபத்து நிறைந்த இந்த பாதையை ஏற்கனவே சில விமான நிறுவனங்கள் தவிர்த்து விட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக மலேசியன் ஏர்லைன்ஸ் அவ்வழியே சென்றது ஏன்? என பலியானவர்களின் உறவினர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.
இரண்டு விமானங்கள் ஒரே தினம், ஒரே மாதம் வெவ்வேறு ஆண்டுகளில் வெடித்து சிதறின! உள்ளிருக்கும் மர்மம் என்ன?
அமெரிக்காவில் நியுயோர்க்கிலிருந்து புறப்பட்ட ரான்ஸ் வேல்ட் ஏயார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் 800 பறப்பை மேற்கொண்டு 12 நிமிடத்தில் 1996ம் ஆண்டு யூலை 17ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடுவானில் வைத்து வெடித்துச் சிதறியது.
அதனை பல அமெரிக்கர்களும் பார்த்திருந்தனர். விமானம் வெடிப்பதற்கு முன்னர் நிலத்திலிருந்து வானிற்கு தீப்பிழம்புடன் கூடிய ஒரு பொருள் சென்றதை கண்டதாக அவர்கள் சாட்சியம் சொன்னார்கள்.

ஆனாலும் இன்றுவரையும் அது மூடுமந்திரமாகவே இருக்கிறது.

அதுபோலவே இன்றும் 18 ஆண்டுகளுக்கு பிறகு அதே யூலை மாதம் 17ம் திகதி உக்கிரேனில் இன்னொரு விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது என லங்காசிறியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் கனடாவிலிருக்கும் திரு.சுதர்மா அவர்கள் இன்றைய விமான விபத்துப் பற்றிக் குறிப்பிடும் போது தெரிவித்தார்.

இது தொடர்பில் லங்காசிறி வானொலியின் சிறப்பு ஆய்வினைச் செவிமெடுக்க....

-

ad

ad