புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 ஜூலை, 2014


ஏவுகணை தாக்குதல் மூலம் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதா?
 

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ரஷ்யா அருகே உக்ரைனில் விபத்துக்குள்ளானது.


இந்த விமானம் நொருங்கி விழுந்ததாகவும், இதில் பயணம் செய்த 295 பேரும் பலியானதாக அதிர்ச்சி தகவல் வருகிறது.விமானத்தில் பயணிகள் 280 பேரும், விமான குழுவினர் 15 பேரும் இருந்துள்ளனர்.

இது குறித்து மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், ‘’உக்ரைன் அருகே சென்ற போது விமானத்தினுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது’’ என்று விளக்கம் அளித்துள்ளது.
 உக்ரைன் நாட்டில் உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருக்கிறது.  எனவே, விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என உக்ரைன் அரசு குற்றம் சாட்டுகிறது.