புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2014

பிரேசில் அணியின் தோல்வியை தொடர்ந்து பதவி விலகினார் பயிற்றுவிப்பாளர் 
பீபா உலகக் கிண்ண போட்டிகளில் பிரேசில் அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து  அந்த அணியின்  பயிற்றுவிப்பாளர் லூயி பிலிப் ஸ்கோலாரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
 
32 நாள் சமரின் பின்னர் நேற்று முன்தினம் நிறைவுக்கு வந்த பீபா வின் 20 ஆவது உலகக் கிண்ணத்தொடரில் இம் முறை பிரேசில் அணி கிண்ணத்தை வெல்லும் என்று அந்நாட்டு மக்கள் உலக உதைபந்தாட்ட ரசிகர்களே எதிர்பார்த்து இருந்தனர்.
 
இருப்பினும் ஆரம்பத்திலிருந்தே தத்தித் தத்தி வெற்றி பெற்ற பிரேசில் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வியை தழுவியது.
 
இதை தொடர்ந்து மூன்றாவது இடத்திற்காக நடந்த போட்டியிலும் நெதர்லாந்திடம் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் தோல்வி அடைந்தது. இந்த தொடர் தோல்விகளால் ஏமாற்றமடைந்த அந்நாட்டு ரசிகர்கள் கோபமடைந்தனர். இந்நிலையில் பிரேசில் அணியின் பயிற்றுவிப்பாளர் லூயி பிலிப் ஸ்கோலாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 
ஸ்கோலாரியின் ஒப்பந்தத்தை பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு புதுப்பிக்காது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து வந்த நிலையிலும் பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு நிர்ணயம் செய்ய தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ஸ்கோலாரி தெரிவித்திருந்த நிலையிலும் தனது ஓய்வை தற்போது அறிவித்துள்ளார்.
 
இதேவேளை கடந்த 2002ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த உலகக் கிண்ண போட்டியில் பிரேசில் வெற்றி பெற உதவியவர் ஸ்கோலாரி என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad