புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2014


காங்கிரசார் எனக்கு நெருக்கமானவர்கள்: மோடி அரசு எனக்கு எதிரானது: ராகுலுக்கு பிரதாப் வேதிக் பதில்

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவராக கூறப்படும் ஹபீஸ் சயீத்தை, பாபா ராம்தேவ் உதவியாளர் வேதபிரதாப் வேதிக் அண்மையில் பாகிஸ்தானில் சந்தித்து பேசியது குறித்து அரசு விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஹபீஸ் சையத் வேதிக் சந்திப்பு இந்திய தூதரகத்துக்கு தெரிந்து நடந்ததா. வேதிக் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்றார்.

தற்போது இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் வேதிக் “காங்கிரஸ் அவர்களை அவர்களவே முட்டாள் ஆக்கி கொண்டுள்ளனர். அவர்கள் கையில் கடந்த 10 ஆண்டுகளாக நாடு இருந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஹபீஸ் சயீத்தை நான் ஒரு செய்தியாளராக பாகிஸ்தான் செய்தியாளருடன் சென்று சந்தித்தேன். அனைத்து தரப்பினரும் எனக்கு மரியாதை தருகிறார்கள். காங்கிரசார் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஆனால் அந்த அளவுக்கு பாஜகவினர் இல்லை. அவர்கள் (காங்கிரசார்) என்னை மிகவும் நேசிக்கிறார்கள். ஆனால் மோடி அரசு எனக்கு எதிரானது என்று கூறியுள்ளார். 

ad

ad