புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2014


ஐநா தூதுவர் ஏஞ்சலினா ஜூலி இலங்கை அகதிகளை காண நவுறு தீவு பயணம்
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான தூதுவரும் நடிகையுமான ஏஞ்சலினா ஜூலி நவுறு தீவிற்கு பயணம் செய்ய உள்ளார்.
நவுறு ஜனாதிபதி பரோன் வாகாவின் அழைப்பையேற்று ஏஞ்சலினா நவுறு தீவிற்கு பயணம் செய்யவுள்ளதாக நவுறு அரசாங்கத்தின் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஏஞ்சலினா நவுறு தீவிற்கு பயணம் செய்யும் தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அரசியல் புகலிடம் கோரிய இலங்கையர்கள் உள்ளிட்ட பல நாட்டவர்கள் நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் அடிப்படை வசதிகளற்று காணப்படுவதாக ஜக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் விமர்சனங்களை வெளியிட்டன.
இந்நிலையிலேயே அகதி முகாம்களின் உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பமாக, ஜக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதுவரும் நடிகையுமான ஏஞ்சலினா ஜூலியின் பயணம் அமைய உள்ளதாக நவுறு அரசாங்கத்தின் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

ad

ad