புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஆக., 2014

பட்டியலில் இல்லாத திருச்சி மாநராட்சிக்கு விருது ஏன்? ஜெயலலிதா தொகுதி என்பதாலா? திமுக கவுன்சிலர்கள் கேள்வி
10 மாநகராட்சிகளில் 5 மாநகராட்சிகளை தேர்வு செய்து, அதில் ஒரு மாநகராட்சிக்கு சுதந்திர தினவிழாவில் விருது அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சுதந்திர தினவிழாவில் திருச்சி மாநகராட்சிக்கு விருது அறிவிக்கப்பட்டு, அதனை மேயர் ஜெயா பெற்றுக்கொண்டார்.

இதற்காக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற இன்று (வியாழக்கிழமை) திருச்சி மாநகராட்சியில் உறுப்பினர்கள் கூடினர். அப்போது திமுக கவுன்சிலர்கள் வெங்கட் ராஜ் மற்றும் முத்துச்செல்வம் ஆகியோர், தேர்வு பட்டியலில் தூத்துக்குடி, மதுரை, கோவை, திருப்பூர், சேலம் ஆகியவை இருந்தன. விழா அன்று திருச்சிக்கு விருது கொடுக்கப்பட்டது ஏன். ஜெயலலிதா தொகுதி என்பதாலா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், திமுக உறுப்பினர்கள் வெளியேற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இருப்பினும் திமுக உறுப்பினர்கள் தங்களது இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.

இதனிடையே விருது வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.